இந்தியாவிற்கும் வந்தது "பேஸ்புக் மெசென்ஜர் லைட்"!

இந்த பேஸ்புக் மெசென்ஜர் லைட் , வழக்கமான பேஸ்புக் மெசென்ஜர் வழங்கும் அடிப்படை செயல்பாடுகளை வழங்கக்கூடியது. ஐபோனில் பயன்படுத்த முடியாது.

இணைய வேகம் குறைவாக இருக்கும் போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் மெசென்ஜர் லைட் ஆப் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அடிப்படை வசதி கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வேகம் குறைவாக இருக்கும் பயனர்கள் பயன்படுத்தும் நோக்கில் இந்த மெசென்ஜர் லைட் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான பேஸ்புக் மெசென்ஜரில் உள்ள, அடிப்படை அம்சங்கள் இந்த பேஸ்புக் மெசென்ஜர் லைட்-ல் உள்ளது. டெக்ஸ்ட், ஃபோட்டோ, எமோஜி மற்றும் ஸ்டிக்கர்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பிடும்படியாக, இந்த பேஸ்புக் மெசென்ஜர் லைட் 10 எம்.பி-க்கும் குறைவானது என்பதால், இதனை எளிதில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமான பேஸ்புக் மெசென்ஜர் 40 எம்.பி என்பது கவனிக்கத்தக்கது.

இன்டர்நெட் மூலமாக வாய்ஸ் கால் செய்வது என்பது அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த மெசன்ஜர் லைட்-லும் இந்த வசதி உள்ளது. இந்த ஆப்ஸ் முன்னதாககே வியட்நாம், நைஜீரியா, பெரு, துருக்கி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும், இந்தியாவில் தற்போது தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

முன்னதாக, பேஸ்புக் நிறுவனமானது “பேஸ்புக் லைட்” வெளியிட்டது. பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன் பயன்படுத்துபவர்களிடையே இந்த பேஸ்புக் லைட் ஆப் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், மெசென்ஜர் லைட் ஆப்ஸை பேஸ்புக் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த இணைய வேகம், குறிப்பாக 2 ஜி பயன்படுத்துபவர்கள் கூட சிரமமின்றி இந்த மெசென்ஜரை பயன்படுத்திக் கொள்ள இயலும்.

×Close
×Close