சமூக வலைதளமான பேஸ்புக்கில் புதியதாக "ஸ்னூஸ்" ஆப்ஷனை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அலாரம் அடித்தால் நாம் அதனை “ஸ்னூஸ்” செய்துவிட்டு அப்படியே இன்னொரு குட்டித் தூக்கம் போடுவமே, அது மாதிரி தான் பேஸ்புக்கின் ஸ்னூஸ் ஆப்ஷனும்.
பேஸ்புக் பயன்படுத்தும்போது, பல்வேறு தேவையற்ற சில விஷயங்கன் நமது நியூஸ் ஃபீடுகளில் வந்து விழும். அதுபோன்ற சில நண்பர்கள், பேஜ், குரூப் ஆகிவற்றிடம் இருந்து விடுதலை பெறவே இந்த ஸ்னூஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். பொதுவாக ஒருவரின் பேஸ்புக் போஸ்ட் நமக்கு வரவேண்டாம் என்பதற்காக, அவர்களை அன்ஃபாலோ அல்லது அன்பிரண்ட் செய்வோம் அல்லவா, அதற்கு மாற்றுவழியை உருவாக்குவதற்கு தான் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த, தேவையற்ற போஸ்ட்களை தவிர்ப்பதற்காக ஸ்னூஸ் ஆப்ஷனை பயன்படுத்தும் போது, 24 மணி நேரம், ஒரு வாரம், ஓரு மாதம் என்ற கால நிலைகள் அதில் கேட்கப்படுமாம். நமக்கு எவ்வளவு காலம் தேவையற்ற போஸ்ட்களை பார்க்க விருப்பமில்லையோ, அதனை நாம் தேர்ந்து கொள்ள முடியுமாம்.
இந்த வசதியினை பேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், எப்போது செயல்பாட்டுக்கு வரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.