பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய இப்போட்டியில் உலக சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி தோகாவின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் இன்று (டிசம்பர் 18) இரவு 8.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. அர்ஜென்டினாவில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி உள்ளார். மெஸ்ஸி தனது முதல் உலகக் கோப்பையும், பிரான்ஸ் அணியின் எம்பாப்பே தனது இரண்டாவது உலகக் கோப்பையையும் வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றனர். உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்த போட்டியை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்து கொண்டாடலாம். ஸ்மார்ட்போன், லேப்டார், டேப், டிவியில் லைவ் பார்க்கலாம்.
ஜியோ சினிமா ஆப், ஸ்போர்ட்ஸ் 18, டாடா ப்ளே, விஐ டிவி மூலம் உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
ஜியோ சினிமா ஆப்
ஜியோ சினிமா ஆப் (JioCinema app) மூலம் இறுதிப் போட்டியை நேரலையில் பார்க்கலாம். இந்த ஆப் உங்கள் போன், டேப்லெட், கணினி, ஸ்மார்ட் டிவி-யிலும் டவுன்லோடு செய்து பார்க்கலாம். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து தமிழ், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் 4K தரத்துடன் பார்க்கலாம்.
டி.வி
கேபிள்/டி.டி.எச் (TV/DTH) இணைப்பு மூலமும் இறுதிப்போட்டியை காணலாம். ஸ்போர்ட்ஸ் 18 (1) மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 கேல் சேனல்களில் போட்டியை நேரலையில் காணலாம்.
VI பயனர்கள்
VI சந்தாதாரர்கள் VI ஆப், VI மூவிஸ் அல்லது டி.வி ஆப் டவுன்லோடு செய்து பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம். இதேபோல், TATA Play DTH சந்தாதாரர்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை
தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் watch.tataplay.com வழியாக Tata play ஆப் டவுன்லோடு செய்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/