பிளிப்கார்டு “பிக் பில்லியன் டே சேல்ஸ்”... அதிரடி ஆஃபரில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!

பிளிப்கார்டில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “பிக் பில்லியன் டே சேல்ஸ்” விற்பனை நடைபெறவுள்ளது.

ஆன்லைன் வணிகதளமான பிளிகார்டில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “பிக் பில்லியன் டே சேல்ஸ்ஸ்” விற்பனை நடைபெறவுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடி விற்பனை 21-ம் தேதி தொடங்கும் நிலையில், பட்ஜெட் ஸ்மாரட்போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. மோட்டோரோலா, சாம்சங், சோலோ, ஸ்வைப், ஆசஸ், மைக்ரோமேக்ஸ் ஜவூமி மற்றும் சான்சஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விற்பனைக்கு வருகின்றன.

அதன்படி பானாசோனின் பி85 (Panasonic P85) ரூ. 6,499-ல் இருந்து ரூ.4,999 என்ற தள்ளுபடி விற்பனைக்கு வருகிறது. ஸ்வைப் எலைட் சென்ஸ் ரூ.5,999 ( முந்தைய விலை ரூ.7,499) சோலோ எரா 1எக்ஸ் ( Xolo Era 1X) ரூ.5,999 (முந்தைய விலை ரூ.4,999), ரூ.5999 விலையிலான யூனிக் 2 (Yunique 2) ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, ஐவூமி (iVoomi Me 3), ஐவூமி மீ 3எஸ் (iVoomi Me 3S) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ.1000 மற்றும் ரூ. 1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஆன்5(Samsung Galaxy On5), சாம்சங் கேலக்ஸி ஆன்7( Samsung Galaxy On7), மற்றும் சாம்சங் கேலக்ஸி கே3 புரோ( Samsung Galaxy J3 Pro) ஆகியவவை ஆஃபர் விலையில் வரவுள்ளன. இதேபோல, ஐவூமிஎம்ஐ மீ4 (iVooMi Me4), மைக்ரோமேக்ஸ் எவோக் பவர்(Micromax Evok Power), சோலோ எரா 1எக்ஸ் புரோ(Xolo Era 1X Pro) உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுகளை இந்த பிக் பில்லியன் டே சேல்ஸ்-ல் ஆஃபரில் பெற முடியும். அதுமட்டுமல்லாமல், எஸ்.பி.ஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபேல, சாம்சங் கேலக்ஸி எஸ்7 (Samsung Galaxy S7)ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாம். மேலும், எச்டிசி யு11 (HTC U11), ஆசஸ் சென்போன் 4(Asus ZenFone 4 Selfie), யு யுரேகா 2( Yu Yureka 2), மற்றும் மோட்டோ சி பிளஸ் ( Moto C Plus) போன்ற ஸ்மார்ட்போன்களும் பிக் பில்லியன் டே சேல்ஸ்-ல் விலை குறைப்பு செய்யப்படவுள்ளன.

×Close
×Close