அமேசானுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ள சேல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Flipkart Big Shopping Days Sale 2018: இந்தியாவில் 2 ஆவது முறையாக நடைபெறும் இந்த சேல் குறித்த எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் இரட்டிபாகியுள்ளது.

Flipkart Big Shopping Days Sale 2018: அமேசான் நிறுவனம் இன்று துவக்கவுள்ள ’அமேசான் ப்ரைம் சேல்’ போட்டியாக, ஃப்ளிப்கார்ட் நிறூவனமும் ’பிக் ஷாப்பிங் டேஸ் சேல்’லை அறிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அடிக்கடி , வாடிக்கையாளர்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்கள், விலைக் குறைப்பு, இஎம் ஐஆஃபர் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக விளங்கும் அமேசான் நிறுவனம் இன்று(16.7.18) மதியம் 12 மணிக்கு அமேசான் ப்ரைம் டே சேல்’ லை ஆரம்பிக்கிறது.

இந்தியாவில் 2 ஆவது முறையாக நடைபெறும் இந்த சேல் குறித்த எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் இரட்டிபாகியுள்ளது. அமேசானின் இந்த சேலில் வாடிக்கையாளர்களுக்கு நம்ப முடியாத ஆஃபர்கள், விலைக்குறைப்பு, கேஷ்பேக் சலுகை ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று திடீரென்று தனது பிக் ஷாப்பிங் டேஸ் சேல்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டி வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃப்ளிப்கார்டின் ’பிக் ஷாப்பிங் டேஸ் சேல்’ இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி வரும் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சேலில் ஸ்மார்ஃபோன்களின் விலை குறைப்பில் ஃப்ளிப்கார்ட் நிறூவனம் அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளது. கூகுள் பிக்ஸெல், சாம்சங், ஹானர் போன்ற பிரபல மொபைல் நிறுவனங்களின் புதிய வரவு மாடல்களின் விலை ஆஃபரில் குறைக்கப்பட்டு நம்ப முடியாத விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கூடவே, சில குறிப்பிட்ட வங்கிகளின் கிரேட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட், இஎம்ஐயில் சலுகைகளும் வழங்கப்பட்டுளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close