/tamil-ie/media/media_files/uploads/2017/08/flipcart.jpg)
பிளிப்கார்ட் நிறுவனம் சூப்பர்.மணி (super.money) என்ற பெயரில் புதிய யு.பி.ஐ செயலி-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்-ஐ சார்ந்த fintech, PhonePe -ல் இருந்து விலகிய ஒரு வருடத்திற்குப் பின் இந்த மைல்கல்லை எட்டியது.
தற்போது பீட்டா பயன்முறையில், முதலில் 100,000 பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து super.money ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
கேஷ்பேக், ஆஃபர்ஸ்
மற்ற ஆப்களைப் போல் அல்லாமல் Super.Money 5 சதவீதம் வரை ரியல் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் இணைந்து "credit with the speed of UPI என்ற வகையில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, Axis Bank மற்றும் IndusInd வங்கி ஆகிய வங்கி உடனும் super.money இணைந்துள்ளது.
super.money ஆப் பயன்படுத்துவது எப்படி?
1. கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று super.money ஆப் பதிவிறக்கம் செய்யவும்.
2. வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிடவும்.
3. அடுத்து பட்டியலில் இருந்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து வங்கி கணக்கை இணைக்கவும்.
4. UPI PIN செட் செய்யவும்.
5. இப்போது பரிவர்த்தனைகளை தொடங்கி கேஷ்பேக் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.