scorecardresearch

Flipkart starts Year End Sale: 5ஜி போன்களுக்கு அதிரடி ஆஃபர் மற்றும் பல.. எப்படி வாங்குவது?

Flipkart offers: பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையில் ஐபோன், பிக்சல் போன் மற்றும் 5ஜி போன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

Flipkart
Flipkart

Flipkart has launched its biggest ‘Year End Sale 2022’: முன்னணி ஆன்லைன் பொருட்கள் விற்பனைத் தளமான பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஐபோன் உள்பட சாம்சங், பிக்சல் ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வழங்குகிறது. குறிப்பாக 5ஜி போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தீர்கள் என்றால்? இது சரியான நேரமாக இருக்கும். இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு ஜியோ, ஏர்டெல் சேவைவை வழங்கி வருகின்றன. ஐபோன் 13 குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு இறுதி விற்பனையில் தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டுள்ள போன்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ரூ.8000 தள்ளுபடி

ஐபோன் 13 5ஜி போனுக்கு சிறந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. கிட்டதிட்ட ரூ. 8000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.61,999 விலையில் கிடைக்கிறது. இதே போன் ஆப்பிள் ஸ்டோர்களில் ரூ.69,990-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையில் ரூ.7,991 தள்ளுபடி விலையில் பெறலாம். ஐபோன் 13 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

கேலக்ஸி S22+

சாம்சங் Galaxy S22+ வேகமான செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் போன்
குறைந்த விலையில் விற்கப்படுகிறது. Samsung Galaxy S22+ தற்போது ரூ.69,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வருகிறது. ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் உள்ளது. இது சிறிய வித்தியாசத்தில் விலையைக் குறைக்கும்.

பிக்சல் 6ஏ

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 43,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட Pixel 6a, பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையில் பெரும் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. ரூ.29,999க்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மற்ற போன்களை விட சிறந்த மென்பொருள் அனுபவத்தையும் சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சங்களையும் பெறலாம்.

மோட்டோ எட்ஜ் 30

The Moto Edge 30 ஸ்மார்ட்போன் 22,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது இதுவரை இல்லாத குறைந்த விலையாகும். இந்த மோட்டோ போன் இந்தியாவில் ரூ. 30,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு ஆல்-ரவுண்டர் 5G ஸ்மார்ட்போன் ஆகும். இதன் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

ரூ.15,000 கீழ் 5ஜி போன்

குறைந்த விலையில் 5G போன் வாங்க வேண்டும் என்றால் Samsung Galaxy F23 5ஜி போன் தேர்ந்தெடுக்கலாம். இது ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதல் சலுகை பெறலாம். இந்த போனை ரூ.13,499 விலையில் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Flipkart starts year end sale massive discount on 5g phones