சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்டு, அமேசானில் தள்ளுபடி விற்பனை!

தள்ளுபடி விற்பனையானது ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தி வரை நடைபெறவுள்ளது என ஃப்ளிப்கார்டு தெரிவித்துள்ளது.இதேபோல அமேசானிலும் ஆஃபர்

இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வணிக தளமான ஃப்ளிப்கார்டு “தி பிக் ஃப்ரீடம்” என்ற தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையானது ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தி வரை நடைபெறவுள்ளது என ஃப்ளிப்கார்டு தெரிவித்துள்ளது.

தள்ளுபடி விற்பனை வழங்கப்படும் நாட்களில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ஆஃப்பர் வழங்கப்படுகின்றன. எச்.டி.எப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்களை கொண்டு வாங்கும் பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், ‘Largest Democracy, Largest Deals’ என்ற ஆஃபரில் வாங்கப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 71 சதவீத தள்ளுடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாம்.

முன்னதாக, மற்றொரு பிரபலமான ஆன்லைன் வணிக தளமான அமேசானும் இதேபோன்ற தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தது. “அமேசான் கிரேட் இன்டியன் சேல்” என அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி விற்பனையானது ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரிகளில் உள்ள 10 கோடிக்கும் அதிகமாக உள்ள பொருட்களை இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள முடியும். அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் இந்த 30 நிமிடத்திற்கு முன்னதாக இந்த ஆஃபரில் வாங்கிக் கொள்ளலாம்.

அமேசானில் ‘Guess Who’ என்ற புதில் விளையாட்டு ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த புதிர்விளையாட்டை, குறிப்பாக அமேசான் ஆப்-ல் மட்டுமே விளையாட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close