Advertisment

பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் (Billion Capture+) ஸ்மார்ட்போன் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flipkart, smartphones, Flipkart’s Billion Capture Plus,

பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் நவம்பர் 15-ம் தேதி வெளிவரும் என ப்ளிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 3ஜி.பி ரேம் கொண்ட பில்லியன் கேப்சர் பிளஸ் ரூ.10,999 என்றும், 4ஜி.பி ரேம் கொண்ட பில்லியன் கேப்சர் பிளஸ் ரூ.12,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன்(Billion Capture+ phone) சிறப்பம்சங்கள்

  • 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசஸர்
  • 3ஜி.பி/4ஜி.பி ரேம் மற்றும் 32ஜி.பி/64ஜி.பி (மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)
  • 13எம்.பி + 13 எம்.பி என்ற டுயர் ரியர் கேமரா வசதியை பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அதோடு, “சூப்பர் ஃநைட் மோடு” மற்றும் “பொக்கே எஃபெக்ட்” ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது என பிளிப்கார்டு தெரிவித்துள்ளது. 8எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது.
  • 3,500mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இரண்டு நாட்களுக்கு தேவையான பேட்டரி திறன் கிடைக்கும் என பிளிப்கார்டு தெரிவிக்கிறது. குயிக் சார்ச் வசதியின் மூலம் 15 நிமிடம் சார்ச் செய்தால், சுமார் 7 மணி நேரத்திற்கான பேட்டரி திறன் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது அந்நிறுவனம்.
  • ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது என்றும், வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்ஸ் வழங்கப்படும் என பிளிப்கார்டு உறுதியளித்துள்ளது.
  • இரண்டு வகைகளில் பிளிப்கார்டு பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது. அதன்படி, 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான ஸ்மார்ட்போன்களும், ப்ளாக் மற்றும் டெசெர்ட் கோல்டு (Black and Desert Gold) என்ற இரு நிறங்களில் வெளிவரவுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி(நோ-காஸ்ட் இ.எம்.ஐ), தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்டு நிறுவனம் பில்லியன் கேப்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில், இதற்காக நாடு முழுவதும் 125 சர்வீஸ் சென்டர்களை திறக்க முடிவு செய்துள்ளதாம்.

ஆன்லைன் வணிகதளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்டு ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு எப்போதும் தனி மவுசு தான். இந்த நிலையில், தற்போது ஸ்மார்ட்போனில் தனி பிராண்டாக உருவெடுத்துள்ளது பிளிப்கார்டு. எனினும், பிளிப்கார்டுக்கு இது ஒன்றும் புதிதல்ல. பிளிப்கார்டு கடந்த 2014-ம் ஆண்டு டிஜிபிளிப் புரோ சீரியஸ் டேப்லட் (Digiflip Pro series ) அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.5,999 முதல் ரூ.15,999 என்ற விலையில், 5 வகையான டேப்லட் அறிமுகம் செய்யப்பட்டது. இவையனைத்தும் இன்டென் ஆடோம் ப்ராசஸரில் வெளிவந்தது. எனினும், பிளிப்கார்டு அந்த சமயத்தில் அறிமுகம் செய்திருந்த டேப்லட் சக்ஸஸ் அடையவில்லை. தற்போது, மீண்டும் ஹார்டுவேரில் கால்பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிளிப்கார்டு நிறுவனம், பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன்(Billion Capture+ phone) அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்டு நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Flipkart
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment