ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் பலரும் ஸ்டோரேஜ் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக 64 ஜிபி, 32 ஜிபி அல்லது அதற்கும் குறைவான இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன்களில் இந்த பிரச்சனையை நாம் அடிக்கடி சந்தித்து இருப்போம். அந்த வகையில் 3 எளிய முறையில் ஸ்டோரேஜ் ப்ரீ செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
கூகுள் ஃபைல்ஸ்
கூகுள் ஃபைல்ஸ் செயலி உங்க இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்பேஸை விரைவாக ப்ரீ செய்வதற்கான ஒரு வழியாகும். சில போன்களில் கூகுள் ஃபைல்ஸ் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். உங்கள் மொபைலில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், Google Play Store-ல் இருந்து டவுன்லோடு செய்யலாம்.
கூகுள் ஃபைல்ஸ் ஓபன் செய்து, removing duplicates, deleting junk files, removing old screenshots, large files மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்தி ஸ்டோரேஜ் கிளியர் செய்யலாம்.
Backup photos to Cloud
நீங்கள் அதிகம் போட்டோ எடுப்பவராக இருந்தால், உங்கள் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் விரைவில் தீர்ந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ஃபோனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை என்றால், கூகுள் போட்டோஸ் 15 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்குகிறது.
இதற்கு, கூகுள் போட்டோஸ் ஓபன் செய்து உங்கள் வலப்புறத்தில் உள்ள profile pic-யை கிளிக் செய்யவும். இப்போது ‘Free up space’என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து, கேமரா போட்டோஸில் உள்ள படங்களை டெலிட் செய்யுங்கள். கவலை வேண்டும் அந்த படங்கள் கூகுள் போட்டோஸில் ஏற்கனவே பேக்அப் எடுக்கப்பட்டிருக்கும்.
வாட்ஸ்அப் மீடியா
வாட்ஸ்அப் மீடியா கிளின் செய்வது மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு, வாட்ஸ்அப் சென்று வலப்புறத்தில் உள்ள three-dot மெனு கிளிக் செய்து , storage section data sub-menu சென்று manage storage கொடுக்கவும். அதன் பின் அங்கு நிறைய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை தேர்ந்தெடுத்து டெலிட் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“