இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் திட்டத்தின் மூலம் முதல் முறையாக தனி முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விண்வெளிக்கு அனுப்பபடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்கு பல கட்ட சோதனைகளை செய்ய உள்ளது. அந்த வகையில் முதல் கட்ட சோதனை வருகிறது அக்டோபர் 21 நடைபெறும் என அறிவித்துள்ளது. முதல் கட்ட சோதனையில் வீரர்கள் அனுப்பபடும் குழு தொகுதி (crew module) சோதனை செய்யப்படும். சோதனையில் வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
குழு தொகுதி 17 கி.மீ உயரத்திற்குக் ராக்கெட் மூலம் அனுப்பபட்டு அங்கிருந்து நடு வானில் வீரர்கள் அவசர காலத்தில் தப்பிப்பது போன்ற சோதனை செய்யப்படும். அதோடு மீண்டும் வங்காள விரிகுடாவில் பத்திரமாக தரையிறங்குவது போன்ற மீட்கும் சோதனையில் செய்யப்பட உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சோதனை அக்டோபர் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
இந்த சோதனைக்கு இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் உண்மையான தொகுதியின் அளவு மற்றும் எடை கொண்ட குழு தொகுதியின் Unpressurised version பயன்படுத்தப்பட உள்ளது.
"முதல் சோதனையில் கிடைக்கும் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே 2-வது சோதனை செய்யப்படும். எல்லாம் திட்டமிட்ட படி நடந்தால், நாங்கள் இரண்டாவது சோதனையை தொடர்வோம். இல்லையென்றால், முதல் சோதனையில் நடந்த தவறுகளை ஆய்வு கண்டறிந்து ஆய்வு செய்வோம்” என்று ஒரு இஸ்ரோ அதிகாரி கூறினார்.
இரண்டு வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு முதல் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பபட்டு சோதனை செய்யப்படும். ஆளில்லா விண்கல சோதனையில் இதேபோன்ற Unpressurised version குழு தொகுதி பயன்படுத்தப்படும்.
இரண்டாவது ஆளில்லா விண்கல சோதனைக்கு முன் விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சோதனை செய்யப்படும். இரண்டு வெற்றிகரமான ஆளில்லா விண்கல சோதனைக்குப் பிறகு தான் விண்வெளி வீரர்கள் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“