இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் இளைஞர்களுக்கு பிடித்த செயலியாக உள்ளது. சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்ற பல்துறை பிரபலங்கள், சாமானியர்கள் எனப் பலர் இன்ஸ்டா பிரியர்களாக உள்ளனர். கிரிக்கெட், சினிமா எனப் பல துறைகளைச் சேர்ந்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களை பின்தொடர்ந்து அவர்களைப் பற்றி அப்டேட் தெரிந்து கொள்கின்றனர். சிறந்த பொழுதுபோக்கு செயலியாக உள்ளது.
இருப்பினும் சிலர் இதை தவறாகப் பயன்படுத்துகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர். அதனால் சைபர் கிரைம் குற்றங்களுக்கு பல நேரங்களில் வழிவகுக்கிறது. குறிப்பாக இதில், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் பயனர் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தி புதிய வசதியை கொண்டு வரவுள்ளது.
அதாவது, இன்ஸ்டா பயனர்களின் Direct messages (DMs) பக்கத்தில் அதாவது சேட் பக்கத்தில் நிர்வாண படங்கள் அனுப்புவது மற்றும் பெறுவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் பயனர் பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வரவுள்ளது.
தி வெர்ஜ் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சம் தற்போது வளர்ச்சி பணியில் உள்ளது. "Nudity Protection" அம்சமானது கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய "Hidden Words" அம்சத்தைப் போன்றது. ஆபாசமான அர்த்தங்கள், வார்த்தைகள் (offensive content) கொண்ட மெசேஜை இந்த அம்சம் மூலம் தடுக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது. அதுபோல் இந்த புதிய அம்சம் "Nudity Protection" அம்சமும் செயல்பட உள்ளது.
இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்கள் பெறுவதை தடுக்கும் அம்சத்திற்கு மெட்டா நிறுவனம் மெஷின் லேர்னிங் முறையை பயன்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. . "இந்தப் புதிய அம்சம் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை உறுதிசெய்ய நிபுணர்களுடன் ஆலோசித்து பணியாற்றி வருகிறோம். அதேநேரம் பயனர்கள் பெறும் மெசேஜை நிர்வகிக்கவும் அனுமதி வழங்கும்" என மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் இந்த அம்சத்தை பயனர்கள் தாங்களாகவே நிர்வகிக்கலாம். Enable or disable செய்து பயன்படுத்தலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில், சமூக ஊடக தளங்களில் சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2017இல் YouGov ஆய்வுபடி, 40 சதவீதத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் நிர்வாண படங்கள், கிராஃபிக் புகைப்படங்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
2020 ஜூன், ஜூலையில் 17 சதவீத பெண்கள் ஆபாசப் படங்களை அனுப்பியதாக Glitch நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் சைபர் ஃபிளாஷிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்களை வகுத்துள்ள நிலையில், இந்தியாவிலும் சைபர் கிரைம் சட்டங்களின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.