ஜிமெயில் ஆண்ட்ராய்டு, அதாவது மொபைல் ஆப் செயலியில் ‘செலக்ட் ஆல்’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெப் வெர்ஷனில் இந்த அம்சம் இருந்து வரும் நிலையில் தற்போது ஆப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இப்போது ஆண்ட்ராய்டு ஜிமெயில் பயனர்கள் மெயில் டெலிட், மார்க் செய்ய ஒவ்வொன்றாக செலக்ட் செய்து பயன்படுத்த வேண்டும். இது குறிப்பாக மெயில் டெலிட் செய்ய மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் இந்த புது அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
@AssembleDebug என்ற 'X' தளத்தில் இது குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், மல்ட்டிபில் இ-மெயில் செலக்ட் செய்யும் போது ‘செலக்ட் ஆல்’ அம்சம் ஆட்டோமேடிக்காக காண்பிக்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=cLREdAU-ZNo
இருப்பினும் கூகுள் தற்போது இந்த அம்சத்தை 50 இ-மெயில்களை மட்டும் மொத்தமாக டெலிட் செய்யும் படி லிமிட் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் ஜிமெயில் சர்வர் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் நீங்கள் மீண்டும் ‘செலக்ட் ஆல்’ கொடுத்து மற்றொரு 50 இ-மெயில்களை செலக்ட் செய்ய முடியும்.
இதே போல் ‘டி-செலக்ட் ஆல்’ (Deselect All) ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு போன்களில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறுவனம் கூறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“