ஜிமெயிலில் ஏ.ஐ வசதி மூலம் மெயில் எழுதும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
ஜிமெயிலில் ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. Help Me Write என்ற அம்சம் பயன்படுத்தி எந்த துறைக்குமான ஜிமெயில் எளிதாக மற்றும் Professional-ஆன முறையில் எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஆண்டுதோறும் நடத்தும் கூகுள் ஐ.ஓ ( Google I/O) நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் ஏ.ஐ தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றது. அதே நேரத்தில் ChatGPT-க்கு போட்டியாக கூகுள் Bard ஏ.ஐ அறிமுகப்படுத்தியது. கூகுள் ஐ.ஓ நிகழ்ச்சியில் பல்வேறு புது புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தில் முக்கியமாக, Help Me Write என்று அம்சம் குறித்து அறிவிக்கப்பட்டது. அதாவது இது ஒரு ஏ.ஐ அம்சம் ஆகும். இதை ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸில் பயன்படுத்த முடியும். ஜிமெயில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அம்சமாகும். அலுவலக ரீதியாக இதை பயன்படுத்துவோம். அந்தவகையில். எளிதாக மற்றும் Professional-ஆக மெயில் எழுதுவதற்கு “ஹெல்ப் மீ ரைட்” பயன்படுத்தப்படுகிறது. வேலை தேடி, வழக்கமான அலுவலக கடிதம் அல்லது வேறு தேவைக்கான கடிதம் என அனைத்தும் இதன் மூலம் பயன்படுத்தலாம்.
இதனால் நேரம் மற்றும் effort-saver ஆக பயன்படுத்தபடுகிறது. நிகழ்ச்சியில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இதற்கு உதாரணம் கூறினார். அதாவது, உங்கள் விமான பயணம் ரத்து செய்யப்பட்டால் நிறுவனத்திற்கு ஜிமெயில் அனுப்பி எவ்வாறு பணம் திரும்ப பெறுவது என்பது குறித்து உதாரணம் கூறினார்.
எவ்வாறு பயன்படுத்துவது?
Google Docs ஓபன் செய்து கொள்ளவும்.
நியூ டாக்குமெண்ட் ஓபன் செய்யவும்.
இப்போது பக்கத்தின் மேலே உள்ள Help Me Write ஐகானை கிளிக் செய்யவும்.
இப்போது எதை பற்றி மெயில் எழுத வேண்டுமோ அதை குறிப்பிடவும்.
அடுத்து Create எனக் கொடுக்கவும்.
இப்போது உங்களது தேவைக்கு ஏற்றது போல் Customize செய்து கொள்ளலாம்.
எடிட் செய்தவுடன் கிளிக் Insert கொடுத்து ஜிமெயிலில் add செய்யவும். அவ்வளவு தான். இப்போது மெயில் கிரியேட் ஆகி விடும்.
எனினும் இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்படுகிறது. விரைவில் அனைவர் பயன்பாட்டிற்கும் வரும் என நிறுவனம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“