கூகிள் நிறுவனத்தின் அல்லோ ஆப் தற்போது டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் போன்ற வசதிகள் அடங்கிய ஆப்- தான் இந்த கூகிள் அல்லோ. கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அல்லோ ஆப் மூலமாக, சாட் செய்தல், புகைபடத்தை ஷேர் செய்தல் மற்றும் ஸ்டிக்கர் அனுபுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த கூகிள் அல்லோவில் பயன்படுத்த முடியும்.
கூகிள் அல்லோ ஆப்-ஐ டெக்ஸ்டாப்-ல் பயன்படுத்துவது தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இதற்கான சோதனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில், டெஸ்க்டாப்-ல் கூகிள் அல்லோ-வின் சோதனை தற்போது நிறைவடைந்துள்ளதை அடுத்து, அந்த ஆப் டெக்ஸ்க்டாப்-ல் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்பேதைய நிலையில், இந்தஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தியே கூகிள் ஆப்-ஐ டெஸ்க்டாப்-ல் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வசதி விரைவில் ஐஓஎஸ்-க்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகிள் அல்லோவை எவ்வாறு பயன்படுத்துவது?
கூகிள் அல்லோவை, டெஸ்க்டாப்-ல் பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் அல்லோ-வை சமீபத்திய வெர்ஷனுக்கு மேம்படுத்தியிருக்க வேண்டும். மேலும், கம்ப்யூட்டரில் குரோம் ப்ரவுசரை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
- கம்ப்யூட்டரில் இருந்து allo.google.com/web என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- ஆண்ட்ராய்டு போனில் உள்ள அல்லோ ஆப் ஓபன் செய்து, அதில் உள்ள “Allo for web” என்ற ஐகானை க்ளிக் செய்யவும்.
- இதன் பின்னர் கம்யூட்டரில் தெரியும் கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்யவும்.
- தற்போது உங்களது கம்ப்யூட்டரில் அல்லே ஆப்-ஐ பயன்படுத்த முடியும்.
கூகிள் நிறுவனமானது, அல்லோ ஆப் போன்று ஹேங்க்அவுட், டுயோ, யூடியூப் சாட் போன்றவற்றையும் வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐயோஸ் என அனைத்து பயனர்களும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.