ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ பெறவிருக்கும் மோட்டோரோலா டிவைசஸ்!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அட்டேட்ஸ் பெறவுள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்ஸ் பட்டியல்

moto-android-o-750, Google Android 8.0 Oreo, Google, Android, Google Android 8.0 Oreo, Motorola,Smartphone

கூகிள் நிறுவனத்தின் கூகிள் பிக்சல், மற்றும் கூகிள் நெக்சஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்ட்டு 8.0 ஓரியோ அப்டேட்களை கடந்த மாதம் பெற்றது. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும்  ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்ஸை பெறவுள்ளது. இதனை மோட்டோரோலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ கிடைக்கப்பபெறும் என்பதனை பட்டியலிட்டுள்ள மோட்டோரோலா நிறுவனம், எப்போது இந்த அப்டேட்ஸ் கிடைக்கப்பெறும் என்பதனை தெரிவிக்கவில்லை.

இது குறித்து மோட்டோரோலோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்ஸ் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பதனை மகிழ்ச்சியுடம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. அதோடு, குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களையும் மோட்டோரோலா நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

 • மோட்டோ இசட் (Moto Z)
 • மோட்டோ இசட் ட்ராய்டு (Moto Z Droid)
 • மோட்டோ இசட் ஃபோர்ஸ் ட்ராய்டு (Moto Z Force Droid)
 • மோட்டோ இசட் ப்ளே (Moto Z Play)
 • மோட்டோ இசட் ப்ளே ட்ராய்டு( Moto Z Play Droid)
 • மோட்டோ இசட்2 ப்ளே (Moto Z2 Play)
 • மோட்டோ இசட் 2 ஃபோர்ஸ் எடிசன் (Moto Z2 Force Edition)
 • மோட்டோ எக்ஸ்4 (Moto X4)
 • மோட்டோ ஜி5 (Moto G5)
 • மோட்டோ ஜி5 ப்ளஸ் (Moto G5 Plus)
 • மோட்டோ ஜி5எஸ் (Moto G5S)
 • மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் ( Moto G5S Plus)

இந்த பட்டியலை பார்க்கும்போது மோட்டோரோலாவின் சமீபத்திய புதிதாக வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே இந்த அப்டேட்ஸ் கிடைக்கப்பெறுவதாக தெரிகிறது. மேலும். மோட்டோ ஜி4 சீரியஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முன்னதாக வந்தவைகளுக்கு இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

இதேபோல, நோக்கியா, எச்.டி.சி மற்றும் ஓன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டட்ஸ் கிடைக்கப்பெறும் என்பதனை உறுதிபடுத்தியுள்ளன. எச்.டிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அந்நிறுவனத்தின் எச்.டி.சி யு11(HTC U11), எச்.டி.சி யு அல்ட்ரா( HTC U Ultra), எச்.டி.சி ( HTC 10) போன்ற ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓரியோவை பெறவுள்ளது. நோக்கியா நிறுவனமானது நோக்கியா 8, நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஓரியோ அப்டேட்ஸ் வழங்கவுள்ளது.

ஒன் ப்ளஸ் நிறுவனமும் அதன் தயாரிப்புகளான ஒன்ப்ளஸ் 3(OnePlus 3), ஒன்ப்ளஸ் 3T(OnePlus 3T) மற்றும் ஒன்ப்ளஸ் 5(OnePlus 3) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல, எஸ்சன்ஷியல் பி.எச்-1 (Andy Rubin’s Essential PH-1), சாம்சங், ஹவாய், ஜெனரல் மொபை, க்யோசெரா, எல்.ஜி, ஷார்ப் மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்ஸ் பெறவுள்ளன.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google android 8 0 oreo full list of motorola devices that will get the update

Next Story
ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி & சென்போன் 4 செல்ஃபி புரோ அறிமுகம்!Asus, Asus Zenfone 4 Selfie Pro, Zenfone 4 Selfie dual camera, Zenfone 4 Selfie,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express