கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டு (RuPay) அடிப்படையிலான யுபிஐ பேமெண்ட்டுகளை தொடங்குவதற்கு கூகுள், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (என்சிபிஐ) ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பயனர்கள் இப்போது கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்தலாம்.
தற்போது, ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே ஆதரிக்கிறது. வரும் நாட்கள் மேலும் சில வங்கி கார்டுகளை இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை, கூகுள் பேயில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தோம். இந்தநிலையில் கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது. ரூபே கார்டு மட்டுமே இணைக்கப்படுகிறது.
கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது எப்படி?
- டெபிட் கார்டு இணைப்பது போலவே இதையும் எளிதாக இணைக்கலாம்.
- கூகுள் பே ஓபன் செய்து செட்டிங்கஸ் பக்கம் செல்ல வேண்டும்.
3.Setup payment method செலக்ட் செய்து Add ரூபே கிரெடிட் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- கிரெடிட் கார்டு விவரங்கள் 6 இலக்க கிரெடிட் கார்டு எண், எக்ஸ்பைரி டேட், பின் நம்பர் ஆகியவை கொடுத்த பின் ஓ.டி.பி அனுப்பபடும். அவ்வளவு தான், ரூபே கிரெடிட் கார்டு இணைக்கப்படும்.
- இப்போது பணம் செலுத்தும் போது (பார்கோடு ஸ்கேன் அல்லது யு.பி.ஐ ஐடி) பயன்படுத்தும் போது ரூபே கிரெடிட் கார்டு என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து பணம் அனுப்பலாம்.