/tamil-ie/media/media_files/uploads/2022/12/gmail.jpg)
Gmail
கூகுள் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் Search Engine தளமாகும். அதோடு கூகுள் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. கூகுள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ், கூகுள் வொர்க் ஸ்பேஸ், டாக்குமெண்ட் உள்ளிட்ட பல்வேறு ஆப்-களை இணைத்து பயன்படுத்த முடியும். கூகுள் அக்கவுண்ட் இலவமாக ஓபன் செய்யலாம். அதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஒருவர் எவ்வளவு அக்கவுண்ட் வேண்டுமானாலும், ப்ர்சனல் பயன்பாடு, பிசினஸ் பயன்பாடு என பல்வேறு அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். அந்த வகையில், தற்போது நிறுவனம் தனது பழைய பாலிசியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதாவது பயனர் தனது கூகுள் அக்கவுண்ட்டை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இன்-ஆக்டிவ்வாக வைத்திருந்தால் நிறுவனம் அந்த அக்கவுண்ட் மற்றும் கூகுள் தொடர்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள தரவுகளை நீக்கி அக்கவுண்ட் டெலிட் செய்துவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிசினஸ், பள்ளி, நிறுவனங்கள் போன்ற அக்கவுண்ட்டிற்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
எப்போது கூகுள் இதை தொடங்கும்?
கூகுள் இதற்கு டிசம்பர் 2023 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் தங்கள் அக்கவுண்டை ஆக்டிவ் செய்ய வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அதேபோல் டெலிட் செய்வதற்கு முன் கூகுள் அந்த அக்கவுண்டிற்கு பல முறை மெயில் அனுப்பும் என்றும் கூறியுள்ளது.
ஏன் டெலிட் செய்யப்படுகிறது?
அதாவது, பழைய இன்-ஆக்டிவ் அக்கவுண்களில் பாதுகாப்பு குறைபாடு அதிகம் உள்ளது. 2-step verification set up கிடையாது என்பதால் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பழைய அக்கவுண்டை எப்படி ஆக்டிவ் செய்வது?
உங்கள் பழைய அக்கவுண்டை பாஸ்வேர்டு உள்ளிட்டு லாக்-இன் செய்யவும். அந்த அக்கவுண்டில் ஜிமெயில் எழுதலாம். டிரைவ் பயன்படுத்தலாம். Google Search செய்யலாம். பிளே ஸ்டோர், யூடியூப் போன்றவற்றை பயன்படுத்தி ஆக்டிவ் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.