முழு சூரிய கிரகண நிகழ்வை காண ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த அரிய நிகழ்வை காண வானியலாளர்கள், ஆய்வாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். அரிய முழு சூரிய கிரகண நிகழ்வு நாளை (ஏப்ரல் 8) நிகழ உள்ளது. இந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் போது நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த நேரத்தில் நிலவு சூரியனை மறைத்து வைரம் போல் ஜொலிக்கும். இந்த அற்புத நிகழ்வை காண உலக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மக்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில், முழு சூரிய கிரகணத்தையொட்டி கூகுள் ஃபன் அனிமேஷன் உருவாக்கி உள்ளது. முழு சூரிய கிரகணம் தொடர்பாக கூகுளின் சர்ச் செய்தால் நிலவு சூரியனை கடந்து கிரகணம் ஏற்படும் காட்சிகளை அனிமேஷன் வடிவில் உருவாக்கி உள்ளது.
அதன்படி, solar eclipse 2024, April 8 eclipse, solar eclipse போன்ற வார்த்தைகளை டைப் செய்து தேடினால் இந்த அனிமேஷன் காண்பிக்கப்படும்.சூரியன் பின்புறம் பிரகாசமாக இருக்க நிலவின் silhouette காட்சி காண்பிக்கப்படும்.
அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். கரீபியன், கொலம்பியா, வெனிசுலா, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஐஸ்லாந்தின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் அல்லது ஆசியாவில் வேறு எங்கும் யாருக்கும் கிரகணத்தை காண முடியாது.