Advertisment

இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்ன? இந்தியா ட்ரெண்டிங் என்ன தெரியுமா?

Google Year in Search 2022: இந்தாண்டு கூகுள் தளத்தில் பயனர்கள் அதிகம் தேடிய வார்த்தைகள் என்ன என்று குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் ட்ரெண்டிங் மற்றும் இந்தியர்கள் தேடிய வார்த்தைகள் குறித்து இங்கு காண்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google_

Google

கூகுள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஜாம்பவானாக இருந்து வருகிறது. கூகுள் மிகப்பெரிய சர்ச் இன்ஜிங் இணையதளமாகும். ஐபோன் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்து போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பயன்படுத்தாதவர்களே இல்லை. அனைத்து விதமான தகவல்களும் ஒரே இடத்தில் உள்ளது. நாம் பக்கத்தில் உள்ள கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் 'Shops near me' என்று சர்ச் செய்து பார்த்து பயன்படுத்துவோம். அந்த அளவிற்கு கூகுளை நாம் பயன்படுத்துகிறோம். அந்தவரிசையில் இந்தாண்டு உலகம் முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்ன? இந்தியர்கள் தேடிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் விளையாட்டு நிகழ்வுகள் முதல் இடம் பிடித்துள்ளன. கிரிக்கெட், கால்பந்து குறித்து அதிகம் தேடி உள்ளனர். உலகளவில் 'வேர்ட்லே ' (Wordle) ஆன்லைன் விளையாட்டு குறித்த வார்த்தையை தேடி உள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தியா vs இங்கிலாந்து போட்டிகள், உக்ரைன், ராணி எலிசபெத், இந்தியா vs SA ஆகியவை தேடி உள்ளன.

சுவாரஸ்யமாக, சமையல் வகையில் பன்னீர் பசண்டா தேடல் உலகளவிலும் மற்றும் இந்திய பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

publive-image

இந்தியாவில் பிரபலமான தேடல்கள்

இந்தியாவில் பிரபலமான தேடல்களில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கோவின், ஃபிஃபா உலகக் கோப்பை, ஆசியா மற்றும் ஐந்தாவது இடத்தில் ஆண்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பை உள்ளது.

publive-image

மேலும், ‘How to’ வரிசையில் கோவின் பற்றி தேடப்பட்டுள்ளன. கோவின், இ-ஷ்ராம் கார்டு, அக்னிபத் திட்டம் போன்ற அரசாங்கத் திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக தேடப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு டவுன்லோடு செய்வது (How to download Covid vaccination certificate) என்று அதிகம் பேர் தேடியுள்ளனர்.

திரைப்படங்கள்

இந்தியாவில் திரைப்படங்கள் குறித்த தேடலில் பிரம்மாஸ்திரா மற்றும் கேஜிஎஃப் 2 முன்னணியில் உள்ளன. அதைத் தொடர்ந்து தி காஷ்மீர் பைல்ஸ், லால் சிங் சத்தா, த்ரிஷ்யம் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா: தி ரைஸ், விக்ரம் மற்றும் காந்தாரா இடம்பெற்றுள்ளன. இந்தியப் பட்டியலில் உள்ள ஒரே ஆங்கிலப் படம் Thor: Love and Thunder. பிரம்மாஸ்திரா மற்றும் கேஜிஎஃப் 2 உலகளாவிய திரைப்படங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளன.

செய்தி, அரசியல்

செய்தி, அரசியல் தொடர்பான தேடலில் பா.ஜ.க முன்னாள் தலைவர் நூபுர் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். உலகளவில், அதிகம் தேடப்பட்ட செய்தி ஆளுமை ஜானி டெப், அதைத் தொடர்ந்து வில் ஸ்மித் மற்றும் ஆம்பர் ஹியர்ட் ஆகியோர் உள்ளனர். விளாடிமிர் புடின் நான்காவது இடத்திலும், கிறிஸ் ராக் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பிரேக்கிங் நியூஸ் ( Breaking news) செய்தி நிகழ்வுகள்

பிரேக்கிங் நியூஸை உருவாக்கிய செய்தி நிகழ்வுகள்' பட்டியலில், இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் மரணம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளன. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம், பிரிட்டன் ராணி எலிசபெத் II மற்றும் பாடகர் கே.கே மற்றும் பப்பி லஹிரி ஆகியோரின் மரணமும் முதல் பத்து இடங்களில் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment