/tamil-ie/media/media_files/uploads/2023/02/whatsapp-logo-featured-express-photo-1.jpg)
அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பெரும் பங்கு வகிக்கிறது. அதேபோல் சமூக வலைதளங்களும் பிரபலமாக உள்ளது. தற்போது வரும் தொலைபேசிகள் இரட்டை சிம் ஸ்லாட்டுகளுடன் வருகின்றன. பயனர்கள் ஒரு எண் அலுவல் தொடர்பாகவும், மற்றொரு எண் தனிப்பட்ட முறைக்கும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் WhatsApp நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒரு சாதனத்தில் இரண்டு கணக்குகளை ஆதரிக்கவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட் பயன்படுத்தலாம்.
Oppo, Xiaomi, Realme, Vivo மற்றும் OnePlus போன்ற சீன போன்களில் இன்-பில்ட் குளோனர்கள் (cloners) உள்ளன. அவை ஒரே சமயத்தில் 2 வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதிக்கிறது. சாம்சங் அதன் Dual Messenger feature மூலம் இதை அனுமதிக்கிறது. உங்கள் போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் இயங்கவில்லை என்றாலும் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பயன்படுத்தலாம். அவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
சாம்சங் போனில் 2 வாட்ஸ்அப் அக்கவுண்ட் அமைப்பது எப்படி?
- செட்டிங்ஸ் > Advanced features > Dual Messenger
- Dual Messenger அம்சத்தை ஆன் செய்ய வேண்டும்.
- தனி அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும் என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது இன்ஸ்டால் கொடுத்து Confirm கொடுக்க வேண்டும்.
Xiaomi phone (ஜியோமி போன்)
- செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று > ஆப்ஸ் >டூயல் ஆப்ஸ் பக்கம் செல்ல வேண்டும்
- அங்கு கிரியேட் ( Create) கொடுக்க வேண்டும்.
- பின்னர் திரையில் பட்டியல் வரும். அதில் வாட்ஸ்அப் கிளிக் செய்ய வேண்டும்.
Oppo, Realme, and OnePlus போன்களில் 2 வாட்ஸ்அப் பயன்படுத்துவது
- செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று > ஆப்ஸ் > ஆப் கிளெனர் ( App cloner) பக்கம் செல்ல வேண்டும்
- அதில் வாட்ஸ்அப் என செலக்ட் செய்ய வேண்டும்.
- அடுத்து Create app clone பக்கம் செல்ல வேண்டும்.
- இப்போது உங்கள் ஆப் டிராயரில் (app drawer) வாட்ஸ்அப் தேர்ந்தெடுத்து, எப்போதும் போல் அமைக்கவும். அவ்வளவு தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.