பழைய வாட்ஸ்அப் வேண்டாம்.. உடனே அப்டேட் செய்யுங்க.. அரசு எச்சரிக்கை!

வாட்ஸ்அப்பில் இரண்டு வகையான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பழைய வாட்ஸ்அப் வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் உடனடியாக சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்படி இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் இரண்டு வகையான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பழைய வாட்ஸ்அப் வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் உடனடியாக சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்படி இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC: இனி வேறு ஆப் வேண்டாம்..  வாட்ஸ்அப்பில் live train status பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது. ஒரு தகவலை மற்றவர்களுக்கு எளிதாக பகிர முடிவதால் பலரும் இதைப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் பல்வேறு புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்திய அரசு, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (The Indian Computer Emergency Response Team (CERT-IN)) வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு குறைபாடு அம்சம் கண்டறியப்பட்டுள்ளதால் பயனர்கள் உடனடியாக தங்களது வாட்ஸ்அப்பை சமீபத்திய புது வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Integer overflow காரணமாக 2 வகையான RCE எனப்படும் (ரிமோட் கோடு எக்ஸிகியூஷன்) பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இது வீடியோ கால் அம்சத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். ஹேக்கர்கள் கோடு அனுப்பி வாட்ஸ்அப் ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் என கூறுகின்றனர்.

இதேபோல், வாட்ஸ்அப்பில் மற்றொரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட வீடியோ பைல்ஸ், இதை அனுப்பி ஹேக்கர்கள் வாட்ஸ்அப்யை ஹேக் செய்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பைல்ஸை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்படுகிறது என அரசு எச்சரிக்கிறது.

Advertisment
Advertisements

இந்த பாதுகாப்பு குறைபாட்டால் பல மென்பொருள்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் போனில் v2.22.15.9 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் v2.22.16.2 வெர்ஷன் அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் உடனடியாக சமீபத்திய வெர்ஷனுக்கு தங்களது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

எப்படி அப்டேட் செய்வது?

உங்கள் போன் வாட்ஸ்அப்பில் 'ஆப் இன்ஃபோ' 'App info' பயன்படுத்தி அப்டேட் செய்யலாம். அல்லது கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் அப்டேட் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: