Advertisment

ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?

ஐ-போன் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக ஆப்பிள் நிறுவனம் அதனுடையே சில செல்போன்களின் விலைகளை குறைத்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தவறான பாஸ்வேர்ட் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆன ஐபோன்!

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ள நிலையில், பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அதன்படி, ஐ-போன் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஆப்பிள் நிறுவனம் அதனுடையே சில செல்போன்களின் விலைகளை குறைத்துள்ளது.

Advertisment

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 6, 5எஸ் ஆகிய மடல்கள் சந்தைகளில் பழைய விலைகளுக்கே விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஐ-போன் 7, 6எஸ், எஸ்இ, ஆகிய மூன்று மடல்களின் விலைகளை ஆப்பிள் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பை அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமலான பின்னர், ஐ-போன் 7 பிளஸ் 32ஜிபி ரூ.67,300-க்கும், 128ஜிபி ரூ.76,200-க்கும், 256ஜிபி ரூ.85,400-க்கும் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், ஐ-போன் 7 - 32ஜிபி ரூ.56,200-க்கும், 128ஜிபி ரூ.65,200-க்கும், 256ஜிபி ரூ.74,400-க்கும் விற்பனை செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஆனால், இது ஐ-போன் வாங்க சிறந்த நேரமா? ஆன்லைன் விற்பனையில் இந்த மாடல்களின் விலை எப்படி உள்ளது?

ஜிஎஸ்டி-க்கு பின்னர் பிளிப்கார்ட், அமேசானில் ஆப்பிள் ஐ-போன் 7, ஐ-போன் 7 பிளஸ் விலை?

ஆப்பிள் நிறுவனத்தின் விலை குறைப்பு இவ்வாறாக இருக்க, நீங்கள் ஐ-போன் 7 - 32ஜிபி வாங்க வேண்டும் என விரும்பினால், பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ரூ.47,699-க்கு வாங்கலாம். இது பழைய விலையில் இருந்து 20 சதவீத சலுகையாகும். ஏனெனில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலை பட்டியலை பிளிப்கார்ட் நிறுவனம் அதனுடைய இணையதளத்தில் இன்னமும் புதுபிக்கவில்லை.

பிளிப்கார்ட்டில் ஐ-போன் 7 - 128ஜிபி ரூ.56,499-க்கு விற்கப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள விலையில் இருந்து ரூ.8,701 குறைவாகும். அதேபோல், ஐ-போன் 7 - 256ஜிபி ரூ.70,499-க்கு விற்கப்படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ள விலைக்குறைப்பை ஒப்பிடுகையில், இந்த சலுகை விலை மிக அதிகமில்லை. ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.74,400-க்கு இந்த மாடலின் விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐ-போன் 7 பிளஸ் 32ஜிபி கருப்பு நிறம் ரூ.61,199-க்கும், 128ஜிபி ரூ.69,999-க்கும் பிளிப்கார்ட்டில் விற்கப்படுகிறது. உங்களுக்கு பட்ஜெட் இருந்தால் 128ஜிபி வாங்குவது சிறந்ததாக இருக்கும். விலை வித்தியாசம் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம், ஆப்பிள் நிறுவனம் அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள படி, ஐ-போன் 7 பிளஸ் 32ஜிபி ரூ.67,300 என பட்டியலிட்டுள்ளது. எனவே, பிளிப்கார்ட்டின் சலுகை தற்போது பெரிய வித்தியாசமல்ல, ரூ.6,101 தான்.

publive-image

ஜிஎஸ்டி-க்கு பின்னர் பிளிப்கார்ட், அமேசானில் ஆப்பிள் ஐ-போன் 6எஸ், 6எஸ் பிளஸ் விலை?

ஆப்பிள் இணையதளத்தில் ஐ-போன் 6எஸ் 32ஜிபி, 128ஜிபி முறைய ரூ.46,900, ரூ.55,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல், ஐ-போன் 6எஸ் பிளஸ் 32ஜிபி, 128ஜிபி முறைய ரூ.56,100, ரூ.65,000-க்கு விற்கப்படுகிறது. ஆனால், 6எஸ் 32ஜிபி மாடலை பிளிப்கார்ட்டில் ரூ.37,299-க்கு வாங்கலாம். ஏனெனில், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ விலையாக பழைய விலையான ரூ.47,999 என்பதை பிளிப்கார்ட் இன்னமும் மாற்றவில்லை. எப்படி இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய விலையில் இருந்து இந்த விலையானது ரூ.9,601 சலுகையாகும்.

ஐ-போன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் 128ஜிபி பிளிப்கார்ர்டில் ஸ்டாக் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், ஐ-போன் 6எஸ் பிளஸ் 16ஜிபி ரூ.45,990-க்கு விற்பனைக்கு உள்ளது. உண்மையாக சொன்னால், இந்த மாடல் உங்கள் பரிசீலனையில் கண்டிப்பாக இருக்காது. மேலும், அடுத்த முறை பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்கும் போது, பொருட்களுக்கு அடுத்தாற்போல் assured குறியீடு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

publive-image

அமேசான் இந்தியா இணையதளத்தில் ஆப்பிள் ஐ-போன் 6எஸ் 32ஜிபி ஸ்பேஸ் ரூ.37,599-க்கு என்ற விளைக்கும், ரோஸ் கோல்டு நிறம் 32ஜிபி ரூ.40,490-க்கு விற்பனை என பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ-போன் 6எஸ் ரோஸ் கோல்டு நிறம் 128ஜிபி ரூ.79,999-க்கும், ஐ-போன் 6எஸ் பிளஸ் 16ஜிபி ரூ.45,499-க்கும் அமேசான் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியான போன்களை வாங்கும் போது, குறைவான சேமிப்பு கொண்ட போன்களை விடுத்து, அதிக சேமிப்பு திறன் கொண்ட போன்களை வாங்குவது சிறந்தது.

ஜிஎஸ்டி-க்கு பின்னர், பிளிப்கார்ட், அமேசானில் ஐ-போன் 6, 6எஸ் பிளஸ், ஐ-போன் எஸ்இ விலை?

ஐ-போன் 7, 6எஸ் மாடல்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வரவில்லையென்றால், ஐ-போன் 6 - 32ஜிபி ரூ.26,999-க்கு பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ் செய்யும் போது கூடுதலாக ரூ.15,000 சலுகை விலையில் கிடைக்கும். ஐ-போன் 6 - 16ஜிபி ரூ.36,499 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது நமது விருப்பமாகக் கூட இருக்கக் கூடாது. ஐ-போன் 6 ஸ்பேஸ் கிரே நிறம் 16ஜிபி ரூ.22,999 என பிளிப்கார்ட்டில் விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

publive-image

ஐ-போன் எஸ்இ (4 இன்ச், 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமிரா)-ன் விலையையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. 32ஜிபி ரூ.26,000-க்கும், 128ஜிபி ரூ.35,000-க்கும் விலை குறைப்பு செய்துள்ளது ஆப்பிள். அதேசமயம், பிளிப்கார்ட்டில் ஐ-போன் எஸ்இ கோல்டு நிறம் 16ஜிபி ரூ.21,799 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சேமிப்பு குறைவான போன்களை பரிசீலனை செய்ய வேண்டாம். உண்மை என்னவென்றால், ஆப்பிள் இணையதளத்தில் உள்ள விலை நிலவரப்படி, இதே மாடலின் 32ஜிபி அதிகாரப்பூர்வ விலையே ரூ.26,000 தான். அதேசமயம், பிளிப்கார்ட்டில் 32ஜிபி ரூ.22,799 என கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய விலையுடன் இதனை ஒப்பிட்டால் இந்த விலையானது அதிக சலுகையுடன் கிடைப்பதாக தெரியவில்லை. அதேபோல், அமேசான் இந்தியாவில் ஐ-போன் எஸ்இ கோல்டு 16ஜிபி ரூ.24,999, இது உங்கள் லிஸ்ட்டில் இருக்காது.

எந்த ஐ-போன் மாடலை வாங்குவது?

உங்களது பட்ஜெட் தான் இதனை தீர்மானிக்க வேண்டும். ஆனால், சேமிப்பு திறன் குறைவாக இருக்கும் மாடல்களை வாங்க கூடாது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆப்பிள் ஐ-போன் 6எஸ் 32ஜிபி பிளிப்கார்ர்டில் நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. ரூ.40,000-க்கு கீழ் ஐ-போன் வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த மாடலை வாங்கலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படும். ஐ-போன் 7 வரிசை மாடல்களை பொறுத்தவரை, சேமிப்பு திறன் அதிகம் கொண்ட மாடல்களின் சலுகை கீழே சென்று விட்டது. சுமார் ரூ.6,000 அல்லது அதற்கு மேல் சலுகையை நீங்கள் எதிர்பார்ப்பது நல்லது. ஆனால், ஐ-போன் 7 பிளஸ் மாடல் விலை அதிகமே.

Iphone Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment