Advertisment

YouTube-ல் இந்த 5 அம்சங்களை கவனித்தீர்களா? அதன் பயன் என்ன?

YouTube 5 hidden features: யூடியூப்பில் உள்ள இந்த 5 அம்சங்கள் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும். அதுபற்றி இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
YouTube-ல் இந்த 5 அம்சங்களை கவனித்தீர்களா?  அதன் பயன் என்ன?

யூடியூப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமானவர்கள் பயன்படுத்தும் ஸ்ரிமிங் தளமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் பயன்படுத்துகின்றனர். பயனர்கள் தங்களது விருப்பமானவர்களின் சேனலில் அதிக நேரம் செலவிடுகின்றனர். யூடியூப் சேனல்கள் முதல் பலர் வருமானம் பெறுகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்தில் YouTube shorts அறிமுகப்படுத்தியது. இதுவும் பயனர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் யூடியூப்பில் நீங்கள் இதுவரை அறியாத 5 அம்சங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

Pause YouTube search and watch history

இந்த அம்சம் நீங்கள் இதுவரை பார்த்த வீடியோக்களை history Pause செய்து வைக்கும். அதாவது, நீங்கள் பார்த்த வீடியோக்களை தற்காலிகமாக மறைத்து வைக்கும். search பாரிலிருந்தும் மறைத்து வைக்கும். உதாரணத்திற்கு, உங்களை போனை யாரிடமாவது கொடுக்க வேண்டும் என்றால், இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொடுக்கலாம்.

இதற்கு முதலில் யூடியூப் சென்ற செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும். அங்கு ‘History and privacy’ஆப்ஷன் கிளிக் செய்து உள் சென்று, ‘Pause watch history’ and ‘Pause search history’ என கொடுக்கப்பட்டிருக்கும் இரு ஆப்ஷன்களை ஆன் செய்து மறைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் மற்ற பிரவுசர்களில் உள்ள incognito mode போல் செயல்படும்.

Set a reminder to take a break

முன்பு சொன்னது போல் யூடியூப் பார்க்கத் தொடங்கி விட்டால் நேரம் போவதே தெரியாது. இது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். கண்கள், மூளைக்கு ஓய்வு அவசியம். அந்தவகையில் யூடியூப் உங்களை ஓய்வு எடுக்க நினைவூட்டும். அதாவது நீங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் யூடியூப் பயன்படுத்த வேண்டும் என முன்பே reminder செட் செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தொடர்ந்து வீடியோ பார்ப்பதை தடுக்கும். நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். reminder கொடுக்கும்.

யூடியூப் செட்டிங்ஸ் மெனு சென்று General பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு “Remind me to take a break” ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும். அதில் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என நேரம் செட் செய்து கொள்ளலாம். அதேபோல், “Remind me when it’s bedtime” ஆப்ஷன் இரவு நேரங்களில் பயன்படுத்தலாம்.

Autoplay வீடியோ ஆப்ஷன் நிறுத்தி வைப்பது

autoplay வீடியோ என்பது நீங்கள் செலக்ட் செய்யாமலே தானாகவே அடுத்த வீடியோ லோடு ஆகி பிளே ஆகும் அம்சம் ஆகும். இதை நீங்கள் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு யூடியூப் செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும். அங்கு Autoplay menu என கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சென்று “Autoplay next video” ஆப்ஷனை off செய்ய வேண்டும்.

video transcripts என்றால் என்ன?

வீடியோ டிரான்ஸ்கிரிப்ட் மிகவும் பயனுள்ள அம்சமாகும். நீங்கள் பாடம் தொடர்பான வீடியோ அல்லது சமையல் குறிப்பு வீடியோ அல்லது வேறுவீடியோக்கள் ஏதாவது பார்த்து குறிப்பு எடுப்பீர்கள் என்றால் அவர்கள் பேசுவதை நிறுத்தி வைத்து குறிப்பு எடுக்க வேண்டும். இது உங்களுக்கு நேரம் எடுக்கும், ஃபாலோ செய்வதற்கும் கடினமாக இருக்கும். இதற்கு எளிமையாக வீடியோ டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் உள்ளது. வீடியோவில் பேசுவது எழுத்து வடிவில் டிரான்ஸ்கிரிப்ட் செய்து கொடுக்கப்படும். ஆனால் இந்த அம்சம் desktop site-யில் கணினி, லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். மொபைல் ஆப் யூடியூப்பில் பயன்படுத்த முடியாது.

Desktop site-யில் பயன்படுத்துவது எப்படி?

முதலில் டெஸ்க்டாப்பில் youtube.com பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், ஏதோ ஒரு வீடியோவை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது, வலப்புறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவை செலக்ட் செய்யவும்.
அதில், “Show transcript” கொடுக்கப்பட்டிருப்பதை ஆன் செய்யவும்.

இப்படியும் வீடியோ சேர் செய்யலாம்!

நிச்சயம் இந்த ஆப்ஷன் பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஒரு வீடியோவை மற்றவர்களுக்கு சேர் செய்ய வேண்டும் என்றால் அந்த வீடியோவை மொத்தமாகத் தான் சேர் செய்ய முடியும். ஆனால் யூடியூப் desktop தளத்தில் குறிப்பிட்ட நேரத்திலிருந்து சேர் செய்யலாம். வீடியோ தொடக்க நேரத்தை குறிப்பிட்டு செலக்ட் செய்து சேர் செய்யலாம்.

இதற்கு முதலில் யூடியூப் desktop செல்ல வேண்டும். அதில் ஏதாவது ஒரு வீடியோ பிளே செய்ய வேண்டும்.
இப்போது சேர் பட்டன் கொடுங்கள். அதில் “Start at” என்ற checkbox வரும்.
அதில் வீடியோவின் எந்த நேரத்திலிருந்து பகிர வேண்டும் எனக் குறிப்பிடுங்கள்.
copy கொடுத்து வீடியோ லிங்க் சேர் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Youtube Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment