Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

பல அதிரடி நடவடிக்கைகள்.. ட்விட்டர் கணக்கை டெலிட் செய்வது எப்படி?

How to delete twitter account: ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Written by sangavi ramasamy

How to delete twitter account: ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
sangavi ramasamy
14 Nov 2022 16:17 IST

Follow Us

New Update
பல அதிரடி நடவடிக்கைகள்.. ட்விட்டர் கணக்கை டெலிட் செய்வது எப்படி?

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உரிமையாளரான முதல் நாளே தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். ஊழியர்கள் பணி நீக்கம் எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Advertisment

பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ. 661.24) கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தார்.
அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில், உங்கள் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்ய விரும்பினால், சில வழிமுறைகளைப் பின்பற்றி டெலிட் செய்யலாம்.

முதலில் Deactivate செய்ய வேண்டும்

ட்விட்டர் கணக்கை நீக்குவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் அல்ல. இது சற்று வேறுபட்டது. ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்க, முதலில் அதை Deactivate செய்ய வேண்டும்.

Advertisment
Advertisements

Deactivate செய்ய, ட்விட்டர் பக்கம் சென்று உங்கள் profile picture icon-னை கிளிக் செய்து Settings and Support பக்கம் சென்று, இடப்புறத்தில் உள்ள இந்த (…) ellipsis icon-யை கிளிக் செய்ய வேண்டும்.

அங்கு Your account என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் கடைசியாக Deactivate Account என்ற ஆப்ஷன் இருக்கும். இதை கிளிக் செய்தால், deactivate செய்தால் ஏற்படும் தகவல்கள் குறித்து கொடுக்கப்பட்டிருக்கும். அதை படித்துவிட்டு next கொடுக்கவும்.

Reactivation period

இப்போது Reactivation period-யை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது எவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்கள் கணக்கு டெலிட் செய்யப்பட வேண்டும் என்ற காலவரையறை. இதில் ட்விட்டர் 2 ஆப்ஷன்களை வழங்குகிறது. 30 நாட்கள் மற்றும் 12 மாதங்கள்

publive-image

இதை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு, அந்த நாட்களுக்குப் பின் ட்விட்டர் தானாகவே டெலிட் ஆகிவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் ட்விட்டரை reactivate செய்யாமல் இருந்தால் டெலிட் ஆகும். 30 நாட்கள் மற்றும் 12 மாதங்கள் என காலவரையறை கொடுத்தப்பின், Deactivate பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதை கொடுத்தப்பின் ட்விட்டார் பாஸ்வேர்ட் (password) கேட்கும், இதைக் கொடுத்து மீண்டும் Deactivate கிளிக் செய்ய வேண்டும்.

Reactivation period காலத்தில் நீங்கள் மீண்டும் ட்விட்டரை ஆக்டிவேட் செய்யாமல் இருந்தால் கணக்கு நிரந்தமாக டெலிட் செய்யப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Twitter Elon Musk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!