அதிக பேட்டரி திறன்... டுயல் ரியர் கேமரா... ஹவாய் ஹானர் 8 ப்ரோ அறிமுகம்!

12 எம்.பி டுயல் ரியர் கேமரா சிஸ்டம் என்பது இதன் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒன்று மோனா குரோம் லென்ஸ் மற்றொன்று ஆர்.ஜி.பி லென்ஸ் ஆகும்.

ஹவாய் ஹானர் 8 ப்ரோ ஸ்மாட்போன்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசானில் ப்ரைம் டே-வின் ஒரு பகுதியாக அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10-ம் தேதி அன்று ஹவாய் ஹானர் 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆனால், ஹவாய் ஹானர் 8 ப்ரோ அதிகாரப்பூர்வமாக ஜூலை 13-ம் தேதி தான் விற்பனைக்கு வருகிறது.

குறிப்பிடும்படியாக, அமேசான் ப்ரைம் டே அன்று எச்.டி.எப்.சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைக் கொண்டு வாங்கும்போது 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனுடன் வோடபோட் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு 45 ஜிபி டேட்டா ஆஃபரும் வழங்கப்படுகிறது.

ஹானர் ப்ரோ 8-ன் சிறப்பம்சங்கள்

  • 12 எம்.பி டுயல் ரியர் கேமரா சிஸ்டம் என்பது இதன் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒன்று மோனா குரோம் லென்ஸ் மற்றொன்று ஆர்.ஜி.பி லென்ஸ் ஆகும்.
  • 8 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  • பேட்டரி திறனை பொறுத்தவரை 4000எம்ஏஎச் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்போனை விட இது அதிகம்.
  • 5.7 இன்ச் குவாட் டிஸ்ப்ளே, 2560 x 1440 ரிசொலூசன்
  • கிரின் 960 ஆக்டா கிரோர் ப்ராசஸர்
  • 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்(ஸ்டோரேஜ் திறனை மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்)
  • ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் வெளியான ஒன் ப்ளஸ் 5 ஸ்மாட்போனுக்கு போட்டியாக, இந்த ஹானர் 8 ப்ரோ களம் இறங்கியுள்ளது. சீனாவில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்துவரும் ஹானர் இந்தியாவில் சற்று தடுமாற்றம் தான் கண்டு வருகிறது. சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் மற்றும் விவோ போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது ஹவாய்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close