ஐ.சி.சி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று (அக்.5) தொடங்கியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்நிலையில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளது.
இதிலும் சிறப்பாக பயனர்களை கவரும் வண்ணம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்-ல் இலவசமாக கண்டு மகிழலாம். இந்நிலையில் நிறுவனம் பார்வையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. குறைந்த டேட்டா செலவு, ஏ.ஐ அம்சத்தில் வீடியோ எனப் பலவற்றை சேர்த்துள்ளது அது பற்றி இங்கு காண்போம்.
மேக்ஸ்வியூ (MaxView for Vertical Cricket Viewing)
ஐ.சி.சி உடன் இணைந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் MaxView ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, பயனர்கள் கிரிக்கெட்
போட்டிகளை Vertical வடிவத்தில் பார்க்க முடியும். இது ஒரு கையிலேயே வைத்து மொபைல் போனை பார்க்க முடியும். live feed, scorecard, and ad formats அனைத்தும் Vertical Viewing-ல் பார்க்கலாம்.
குறைந்த டேட்டா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வீடியோ டெலிவரியை மேம்படுத்தியுள்ளது. குறைந்த டேட்டா பயன்பாடுடன் உயர்தர ஸ்ட்ரீமிங்கை உறுதி செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் டேட்டா கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட்டை ரசிக்கலாம்.
AI-Powered Video Clarity
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் AI அடிப்படையிலான வீடியோ Clarity அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த மேம்பாடுகள் பார்க்கும் தரத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக களத்தில் மோசமான வானிலையின் போதும் துல்லியமான வீடியோவை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“