வானியல் அடிப்படையில் ஒரு "ஆண்டு" என்பது ஒரு கிரகம் சூரியனின் சுற்றுப்பாதையாக ஒரு முறை முழுமையாக சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் ஆகும். அந்தவகையில், பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும்.
இது அனைத்து கிரகங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. காரணம் இதன் தூரம். அதாவது,
சூரியனிற்கு அருகில் இருக்கும் கிரகங்கள் Mercury மற்றும் வீனஸ் போன்ற கோள்கள் அவற்றின் சிறிய சுற்றுப்பாதையின் காரணமாக விரைவாக சூரியனை சுற்றி வந்து ஒரு வருடத்தை நிறைவு செய்கின்றன. மாறாக, தூரமாக இருக்கும் கிரகங்கள் Jupiter and Saturn போன்றைவை அதன் வருடத்தை அடைய அதிக நாட்கள் எடுக்கின்றன.
மற்ற கிரகங்களில் ஒரு வருடம் என்பது எவ்வளவு நாட்கள்?
பூமி நாட்கள் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன.
1. மெர்குரி - 88 பூமி நாட்கள்
2. வீனஸ்- 225 நாட்கள்
3. பூமி -365 நாட்கள்
4. மார்ஸ் - 687 நாட்கள்
5. ஜூபிடர் - 4,333 நாட்கள் (12 ஆண்டுகள்)
6. Saturn - 10,759 நாட்கள்
7. Uranus - 30,687 நாட்கள்
8. நெப்டியூன் - 60,190 நாட்கள் (165 ஆண்டுகள்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“