Advertisment

இந்தியாவில் 5G சேவை : ஐபோன்களில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Airtel 5G Plus, Jio True 5G: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவைகளை ஐபோன் 12, 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் போன்களில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் 5G சேவை : ஐபோன்களில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி பிளஸ், ஜியோ True 5ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. ஏர்டெல் 8 நகரங்களிலும், ஜியோ 4 நகரங்களிலும் முதற்கட்டமாக சேவை வழங்குகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு 5ஜி பயன்படுத்த அப்டேட் வழங்கியுள்ளது. சோதனை அடிப்படையில் பீட்டா அப்டேட் (iOS 16.2 beta) வழங்கியுள்ளது. ஐபோன்களில் 5ஜி அப்டேட் பயன்படுத்துவது குறித்து இங்கு பார்க்கலாம். ஐபோன் 12, 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் போன்களில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

Step 1: பீட்டா iOS சாப்ட்வேருக்கு மாற வேண்டும்

5ஜி-ரெடி என்ற பெயரில் ஆப்பிள் அப்டேட் வழங்குகிறது. முதலில் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பீட்டா iOS சாப்ட்வேர் பயப்படுத்த பதிவு செய்ய வேண்டும். Apple Beta Software Program website என்ற இணைப்பக்கத்தில் பதிவு செய்து ‘Sign Up’செய்ய வேண்டும்.

உங்கள் ஆப்பிள் ஐடி (Apple ID) மற்றும் அதில் கேட்கும் தகவல்களை கொடுத்து ‘Sign Up’ ஆகலாம். iPhone 11, iPhone XS போன்களில் 5ஜி பயன்படுத்த முடியாது. Apple iPhone 12 மற்றும் அதற்கு மேற்பட்ட போன்களில் மட்டுமே 5ஜி பயன்படுத்த முடியும்.

Step 2: iOS 16.2 பீட்டாவிற்கு அப்டேட் செய்யவும்

iOS 16.2 பீட்டாவிற்கு அப்கிரேடு செய்ய உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் மெனு சென்று General பக்கம் சென்று Software Update செலக்ட் செய்யவும். iOS 16.2 பீட்டா வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.

பீட்டா சாப்ட்வேர் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆன பின் போன் restart செய்யப்படும்.

Step 3: 5G ஆக்டிவேட் செய்ய வேண்டும்

உங்கள் ஐபோனை 4ஜி நெட்வொர்கில் இருந்து 5ஜி ஆக மாற்ற செட்டிங்ஸ்> Mobile Data> Mobile Data Options> Voice & Data செலக்ட் செய்ய வேண்டும்.

இதை கொடுத்தப் பின் 3 ஆப்ஷன்கள் கேட்கும். 4G, 5G On and 5G Auto என இருக்கும். இதில் 5G On அல்லது 5G Auto கொடுக்க வேண்டும். 5G Auto 4ஜி மற்றும் 5ஜி என இரண்டிலும் செயல்படும். தானாகவே சிறந்த வேகத்தை கண்டறிந்து செயல்படும்.

publive-image

உங்கள் பகுதியில் ஏர்டெல் 5ஜி பிளஸ் இருந்தால் அதில் செயல்படுத்தலாம். ஜியோ True 5ஜி இருந்தால் அதில் செயல்படுத்தி 5ஜி பயன்பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iphone Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment