Advertisment

அரசின் அதிகாரப் பூர்வ வெப்சைட்; ஆன்லைனில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

மிக முக்கிய அடையாள அட்டையான ரேஷன் கார்டு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
RATION CARD.jpg

ரேஷன் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். அந்தந்த மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோக அமைப்பிலிருந்து (PDS)  மானிய விலையில் உணவு தானியங்கள் பெறுவதற்கு  உதவுகிறது. மேலும் தமிழக அரசின் உதவித் தொகை, பொங்கல் பரிசு ஆகியவை மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

ஆன்லைனில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? 

 

1. https://nfsa.gov.in/ என்ற அரசின் அதிகாரப் பூர்வ இணைய தளப் பக்கத்திற்கு செல்லவும். 

2. வலப்புற கார்னரில் உள்ள Sign in/Register  என்ற ஆப்ஷன் கொடுத்து  Public Login கிளிக் செய்யவும். 

3. அடுத்த பக்கத்தில்,   Common Registration Facility பக்கத்தில்  ‘New User, Sign up here‘ கொடுக்கவும். 

4. பின்வரும் பதிவுப் பக்கத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

5. இப்போது எண், எழுத்துக் கலவையில் லாக்கின் ஐ.டி கொடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த ஐ.டி available -ஆக உள்ளதா என்பதை Check User கொடுத்து கிளிக் செய்து சரிபார்க்கவும். அது available -ஆக இருந்தால் பக்கத்தில் கிரீன் டிக் கொடுக்கப்படும். 

6. அதே போல் தனித்துவமான பாஸ்வேர்ட் உள்ளிடவும். 

7.  ஆதார் அட்டை போன்று அடையாள அட்டைகளில் உள்ளபடி  முகவரி கொடுக்கவும். அடுத்து பின் செக்ஷனில் உங்கள் ஆதார் அட்டையின் பின்புறம் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

8. கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும்.

9. கீழே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனை பெட்டிகள் இரண்டையும் டிக் செய்யவும்.

10.  Submit கிளிக் செய்து ஓ.கே எனக் கொடுக்கவும் . 

11. உங்கள் பதிவு செய்யப்பட்ட  தொலைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும். அதை கொடுக்கவும்.

12.  OTP ஐ கொடுத்து ஓ.கே பட்டனை கிளிக் செய்யவும்.  

லாக்கின்

1. மேல் குறிப்பிட்டவாறு செய்த பின் இப்போது லாக்கின் செய்ய வேண்டும்.  அதற்கு மீண்டும் home screen  சென்று   

 Sign in/Register ஆப்ஷன்  கொடுத்து Public Login > Common Registration Facility என செலக்ட் செய்யவும். அடுத்து ஆதார் கார்டு ஆப்ஷன் கொண்டு லாக்கின் செய்யவும். 

2.   கேப்ட்சா என்டர் செய்து  OTP ஐ உள்ளிடவும்.

3. NFSA போர்ட்டலுக்குள், இடது பக்கத்தில் உள்ள Common Registration Facility ஆப்ஷனை கிளிக் செய்யவும். New Registration தேர்ந்தெடுக்கவும். 

4. இப்போது உங்கள்  மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து Submit கொடுக்கவும்.

5. இப்போது Scheme  செலக்ட் செய்ய வேண்டும். அதில்  Beneficiary type  என்பதைக் கொடுக்கவும். 

6. அடுத்து ஆதார் கார்டில் உள்ளது போல் மற்ற விவரங்களை உள்ளிடவும். 

7.  முகவரி, வங்கி கணக்கு விவரம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு  Save and Continue கொடுக்கவும். 

குடும்ப உறுப்பினர்கள் Add செய்வது 

1. உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன், வலது பக்கம் சென்று அங்குள்ள Add member ஆப்ஷன் கொடுத்து, 

மற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிடவும். 

2. அடுத்து உங்களின் அடையாள அட்டை, ஆவணங்களை கொடுக்கவும் .

3.  அடுத்து உங்கள் வீட்டில்  கணினி மற்றும் மொபைல் போன் உள்ளதா என்று கேட்கப்படும். அதற்கு பதிலளித்து Save and Continue கொடுக்கவும் .

4. இப்போது உங்களுக்கு அருகில்  உள்ள ரேஷன் கடை எது என்பதை drop-down மெனுவில் தேர்ந்தெடுக்கவும். 

5. உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். அப்போது உங்கள்  reference number திரையில் காண்பிக்கப்படும்.  அதை  ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும் அல்லது  PDF-ஆக டவுன்லோடு செய்யவும். 

6.  Common Registration Facility ஆப்ஷன் கிளிக் செய்து  reference number பயன்படுத்தி உங்களின்  Registration Status  தெரிந்து கொள்ளவும்.

7. விண்ணப்பம் approved ஆக உடன் Common Registration Facility பக்கம் சென்று 

‘Get RC Details‘ ஆப்ஷன் கொடுத்து உங்கள் ரேஷன் கார்டு டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment