பூமியில் மட்டுமல்லாமல் நிலவில் கூட சொத்துக்கள் வாங்க முடியுமாம். குறிப்பாக நமக்கு என சொந்தமாக நிலவில் இடம் வாங்கலாம். இது பொய்யல்ல நிஜம்.
நிலவில் வாங்கும் இடத்தை பதிவு செய்ய சர்வதேச சந்திர நிலப் பதிவேடு (ILLR) உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 23 அன்று, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும் கல்வியாளருமான ரூபேஷ் மாசன், நிலவில் வாங்கியதை அறிவித்தார். நிலவில் Luna Earths Moon, Tract 55-Parcel 10772 என்ற இடத்தில் இடம் வாங்கியதாக அறிவித்தார்.
நிலவில் நீங்கள் பல்வேறு இடங்களில் சொத்து வாங்கலாம். அதாவது, முன்னர் சொன்னது போல் Luna Earths Moon, bay of rainbows and sea of rains போன்ற இடங்களில் வாங்கலாம்.
இந்தியாவிலிருந்து நிலவில் சொத்து வாங்க, நீங்கள் பே ஆஃப் ரெயின்போஸ் (bay of rainbows) இணையதளத்திற்குச் சென்று விவரங்களை உள்ளிட்டு வாங்கலாம்.
இங்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ.3,068.40. அதே 3 ஏக்கர் வாங்கினால் ஒரு ஏக்கர் 10% தள்ளுபடி உடன் ரூ. 2,758.80 ஆகும். அதே 5 ஏக்கர் வாங்கினால் ஒரு ஏக்கர் 15% தள்ளுபடி உடன் இந்த தளத்தில் ஒரு ஏக்கர் 2,602.80 விற்பனை செய்யப்படுகிறது.
sea of rains இணையதளமும் இதுபோன்று நிலவில் வேறு இடங்களுக்கு நிலம் விற்பனை செய்கிறது. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்குப் பின் நிலவில் நிலம் வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.