ஹெச்.டி.எஃப்.சி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இந்த வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 3,203 நகரங்களில் 6,300 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு பேலன்ஸ் செக் செய்ய எங்கு செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே நிமிடத்தில் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் மூலம் கூட இதை எளிதாக செய்யலாம்.
மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் செக்
இதற்கு உங்களுக்கு இன்டர்நெட் வசதியோ, ஆண்ட்ராய்டு போனோ தேவையில்லை. உங்கள் போனில் இருந்து 1800 270 3333 எண்ணிற்கு டையல் செய்தால் ஆட்ரோமேட்டிக்காக கால் கட் ஆகி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பேலன்ஸ் காண்பிக்கப்படும்.
எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்வது
வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்து உங்கள் போன் எஸ்.எம்.எஸ் பக்கம் சென்று bal என டைப் செய்து 5676712 இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதன் பின் அதே உங்களுக்கு பேலன்ஸ் காண்பிக்கப்படும்.
வாட்ஸ்அப் மூலம் பேலன்ஸ் செக்
வாட்ஸ்அப் மூலம் பேலன்ஸ் செக் செய்வது மிகவும் எளிது. ஹெச்.டி.எஃப்.சி சாட்போட் மூலம் இது செயல்படும். இதற்கு 7070022222 என்ற எண்ணை உங்கள் போனில் Save செய்து கொள்ளலாம். இப்போது வாட்ஸ்அப் பக்கம் வந்து Hi என அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் ஹெச்.டி.எஃப்.சி சாட்போட் இப்போது தகவல்களை தரும். இதில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“