/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project25.jpg)
Aadhaar-PAN linkin
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலற்றதாகி விடும் என்றும் வரிமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் இணைக்க பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டதால் இனி கால நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது பலரும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர். பான் கார்டு வங்கி பரிவர்த்தனை, வரிமான வரித்துறை தாக்கல் செய்யப் பயன்படுகிறது.
பான் கார்டு இல்லை என்றால் வருமான வரித் தாக்கல் செய்ய முடியாது. வங்கியில் 50,000 ரூபாய்க்குமேல் டெபாசிட் செய்ய முடியாது. இந்நிலையில் உங்களுக்கு பான் எண்ணுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் வரலாம். அதற்கு இங்கே தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ இணையதளமான WWW.incometaxindiaefiling.gov.in/home என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு Verify Your PAN Details சென்று PAN எண், பெயர் குறிப்பிட்டு உங்கள் பான் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளுங்கள். பான் அட்டை செயலில் உள்ளதா இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்ததாக,
ஆதார்-பான் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா?
- WWW.incometax.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
2. 'Link aadhaar status' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.
3. உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு View Link ஆதார் Status என்பதை கொடுக்கவும்.
4. ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்து பதில் காண்பிக்கப்படும்.
5. ஆதார்-பான் இணைக்கப்படவில்லை என்றால் அதுகுறித்தும் நோட்விகேஷன் காண்பிக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படவில்லை என்றால் WWW.incometax.gov.in என்ற இணையதளத்தில் 'Link aadhaar' கொடுத்து மார்ச் 31-க்குள் இணைக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.