Advertisment

ஏர்டெல் அதிரடி ஆஃபர்.. இலவச நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார்.. இதை எப்படி பெறுவது?

ஏர்டெல் குறிப்பிட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today sensex 30 August 2022

ஏர்டெல் முன்னணி தகவல் தொலைதொடர்பு நிறுவனமாகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. அண்மையில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல் முதற்கட்டமாக 8 நகரங்களில் தனது சேவையை தொடங்கி வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பிரீபெய்டு (prepaid) மற்றும் போஸ்ட்பெய்டு (postpaid) ரீசார்ஜ் என 2 முறையில் திட்டங்கள் உள்ளன. இதில், இளம் பயனர்களை கவரும் வகையில் இலவச நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது.

Advertisment

ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களில் ஆஃபர்

ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களில் அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவைகளை இலவசமாக வழங்குகிறது. 3 மாத முதல் 1 வருடம் வரை இலவச சந்தா வழங்குகிறது. அதில் சில பிரபலமான திட்டங்கள் உள்ளன. ரூ.399 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி, 1.5GB இலவச டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. ரூ.599 திட்டத்தில் தினசரி 35GB இலவச டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகும். இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

ஏர்டெல் postpaid திட்டங்களில் ஆஃபர்

ஏர்டெல் போஸ்ட்பெய்டு ரீசார்ஜில் 4 திட்டங்களில் இலவச ஓடிடி சேவைகளை வழங்குகிறது.

ரூ.499 திட்டம்

ஏர்டெல் போஸ்ட்பெய்டு ரூ.499 திட்டத்தில் மாதம் 75ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 6 மாதம் Amazon Prime மெம்பர்ஷிப், ஒரு வருடம் Disney+Hotstar மொபைல் சந்தா இலவசமாக வழங்கிறது.

ரூ.1,199 திட்டம்

ரூ.1,199 திட்டத்தின் கீழ், பயனர்கள் கூடுதலாக 3 இணைப்புகள் பெறலாம். 3 நபர்களிடம் சேவை பகிர்ந்து கொள்ளலாம். 150ஜிபி மாதாந்திர டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். கூடுதலாக Netflix basic பிளான், 6 மாதம் Amazon Prime சந்தா, 1 வருடம் Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசமாகப் பெறலாம்.

ரூ.1,499 பிளாட்டினம் திட்டம்

இந்த திட்டத்தில் 4 குடும்ப நபர்களை இணைத்துக் கொள்ளலாம். 200ஜிபி மாதாந்திர டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 6 மாதம் Netflix standard சந்தா மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப் வழங்குகிறது. இதோடு 1 வருடம் Disney + Hotstar மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதோடு Netflix premium பயனப்படுத்த விரும்புபவர்கள் கூடுதலாக ரூ.150 செலுத்தி பயன்படுத்தலாம்.

குறிப்பு பயனர்கள் இந்த இலவச சந்தா திட்டத்திற்கு ஒரு முறை மட்டுமே தகுதியுடையவர்கள். திட்டம் முடிவடைந்து மறுமுறை இதே திட்டத்தை பயன்படுத்தினாலும் அவர்களுக்கு இலவச ஓடிடி சேவைகள் வழங்கப்பட மாட்டாது.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் activate செய்வது எப்படி?

  1. இலவச மெம்பர்ஷிப் ஆக்டிவேட் செய்ய முதலில் உங்கள் போனில் Airtel Thanks app இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  2. Airtel Thanks app லாக்கின் செய்து ரீசார்ஜ் செய்த உங்கள் ஏர்டெல் மொபைல் நம்பரை பதிவிடவும்.
  3. இப்போது Amazon Prime Video voucher அனுமதிக்கப்பட்டு ஆக்டிவேட் ஆகிவிடும். இதேபோல் Netflix சந்தாவிற்கும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆக்டிவேட் செய்யலாம். ரீசார்ஜ் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் ஆக்டிவேஷன் லிங்க் அனுப்பபடும் அதை பயன்படுத்தி சந்தா ஆக்டிவேட் செய்யலாம்.
Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment