Advertisment

இது தெரியாம போச்சே! லேப்டாப்பில் சீக்ரெட் folders..எப்படி பயன்படுத்துவது?

விண்டோஸ் லேப்டாப், கணினியில் நமது தனிப்பட்ட ஃபைல்ஸ், ஆவணங்களை சேமித்து வைக்க சீக்ரெட் folders அம்சம் உள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
இது தெரியாம போச்சே! லேப்டாப்பில் சீக்ரெட்  folders..எப்படி பயன்படுத்துவது?

பெரும்பாலானோர் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப், கணினி பயன்படுத்துகின்றனர். லேப்டாப், கணினி அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவலக வேலை, படிப்பு, தனிப்பட்ட வேலை, என எல்லாவற்றிற்கும் லேப்டாப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவின் போது லேப்டாப், கணினி பயன்பாடு அதிகரித்தது. எல்லா துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. விண்டோஸ் லேப்டாப்பில் பல வசதிகள் உள்ளன. அந்தவகையில் நமது தனிப்பட்ட ஃபைல்ஸ், ஆவணங்களை சேமித்து வைக்க சீக்ரெட் folders அம்சம் உள்ளது.

Advertisment

பெயர் இல்லாமல் folder உருவாக்க வேண்டும் (blank name)

முதலில் பெயர் இல்லாமல் folder உருவாக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் லேப்டாப், கணினி டெஸ்க்டாப்பில் ரைட்-கிளிக் செய்து New>Folder ஆப்ஷன் கொடுக்கவும். இப்போது மீண்டும் ரைட்-கிளிக் செய்து Rename செய்ய வேண்டும்.

அடுத்ததாக, கீர்போர்ட் கொண்டு Alt+0160 என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இப்போது எந்த பெயரும் இல்லாமல் folder கிரீயேட் ஆகிவிடும்.

ஐகான் நீக்குவது

ஐகான் நீக்க அதை செலக்ட் செய்து ரைட்-கிளிக் செய்து properties செல்ல வேண்டும். அங்கு ‘Customise’ ஆப்ஷனை கிளிக் செய்து பிறகு ‘Change icon’ கொடுக்கவும்.

publive-image

இப்போது வலப்புறத்தில் ஸ்கரால் (scroll) செய்து கீழே வந்தால் 4 ஆப்ஷன்கள் இருக்கும். அதில் ஏதே ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது பெயரில்லாமல், ஐகான் இல்லாமல் ஒரு folder கிரீயேட் ஆகிவிடும். folder மறைந்துவிடும். mouse அல்லது நீங்களாகவே கிளிக் செய்யதால் மட்டும் அந்த folder பயன்படுத்த முடியும். உங்களுடைய தனிப்பட்ட ஃபைல்ஸ், ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் இதில் சேமித்து வைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment