Advertisment

வாட்ஸ்அப்-ல் நீங்களே ஸ்டிக்கர் உருவாக்கலாம்: எப்படி தெரியுமா?

3-ம் தரப்பு செயலி ஏதும் இல்லாமல் வாட்ஸ்அப்லேயே நீங்கள் ஸ்டிக்கர் உருவாக்கலாம், பழைய ஸ்டிக்கர்களை எடிட்-ம் செய்யலாம்.

author-image
sangavi ramasamy
New Update
Whats stic.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது மேலும் புதிதாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்  ஸ்டிக்கர் அம்சம் பெரிதும் வரவேற்பு பெற்ற ஒன்றாகும். காமெடி நடிகர்கள் வசனம், பிரபலங்கள் எனப் பல்வேறு வகைகளில் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது.

Advertisment

அந்த வகையில் தற்போது 3-ம் தரப்பு செயலி ஏதும் இல்லாமல் வாட்ஸ்அப்லேயே நீங்கள் ஸ்டிக்கர் உருவாக்கலாம், பழைய ஸ்டிக்கர்களை எடிட்-ம் செய்யலாம்.  ஏன் ஒரு படி மேலாக உங்களுடைய முகத்தை கொண்டு கூட ஸ்டிக்கர் உருவாக்கலாம். எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். 

1. முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து ஸ்டிக்கர் செக்ஷன் பக்கம் செல்லவும். 
2. அங்கு ‘create sticker’ ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் கேலரியில் இருந்து இப்போது போட்டோ செலக்ட் செய்யவும். 
3. இப்போது உங்களுக்கு தேவையான வகையில் cutout மற்றும் add டெக்ஸ்ட் கொடுத்து ஸ்டிக்கர் உருவாக்கலாம். 
4. இதை செய்த பிறகு send கொடுக்கவும். 

Send கொடுத்த பின் நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செக்ஷனில் வந்து விடும். 

பழைய ஸ்டிக்கர் எடிட் செய்வது எப்படி?

1.  வாட்ஸ்அப் பக்கம் சென்று ஸ்டிக்கர் செக்ஷன் செல்லவும். அங்கு நீங்கள் எடிட் செய்ய வேண்டிய ஸ்டிக்கரை long press செய்யவும்.
2. அடுத்து எடிட் ஸ்டிக்கர் ஆப்ஷன் கொடுக்கவும்.
3. இப்போது உங்களுக்கு வேண்டியபடி Customise செய்யலாம்.  

இந்த அம்சம் ஆப்பிள் பயனர்கள், வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment