scorecardresearch

ஆதார் கொண்டு செல்ல மறந்துடீங்களா? உடனே இ-ஆதார் இப்படி டவுன்லோடு செய்யுங்க

How to download e-Aadhaar card: மத்திய அரசின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிஜிட்டல் ஆதார் கார்டு டவுன்லோடு செய்யலாம். உங்களிடம் உள்ள Physical ஆதார் கார்டு போலவே இந்த டிஜிட்டல் ஆதார் கார்டையும் இணைய பயன்படுத்தலாம்.

Aadhaar- Voter Id linking
Aadhaar card updates

ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு மத்திய அரசால் வழங்கப்படும் தனித்துவ அடையாள அட்டையாகும். அதில் பெயர், பிறந்த தேதி, பிரத்யேக எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதார் கார்டை பான் அட்டை, வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்துடனும் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ரயில் பயணம், வங்கி என முக்கிய இடங்களில் ஆதார் தேவைப்படும் போது நீங்கள் அதை மறந்து வைத்து விட்டு வந்துள்ளீர்கள் என்றால் கவலை வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே இ-ஆதார் (டிஜிட்டல் ஆதார் கார்டு) டவுன்லோடு செய்யலாம். இதுவும் உங்கள் Physical ஆதார் கார்டிற்கு இணையாக பயன்படுத்தலாம். அடையாள அட்டையாக காண்பிக்கலாம்.

இ-ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி?

  1. UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு “My Aadhaar” என்ற டேப் பக்கத்தில் “Download Aadhaar” என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
  3. இப்போது உங்கள் ஆதார் எண் அல்லது enrolment ID (EID) எண் குறிப்பிட வேண்டும்.
  4. பின்னர் உங்கள் பெயர், pin code மற்றும் அதில் உள்ள image captcha code பதிவிடவும்.
  5. அடுத்து “Get One Time Password” (OTP) என்ற பட்டனை கிளிக் செய்து , உங்கள் போனுக்கு வந்த ஓ.டி.பி-யை பதிவிடவும்.
  6. ஓ.டி.பி பதிவிட்ட பின் “Download Aadhaar” பட்டனை கிளிக் செய்யவும்.
  7. PDF ஃபைல் வடிவில் உங்கள் இ-ஆதார் கார்டு டவுன்லோடு செய்யப்படும்.

குறிப்பு: டவுன்லோடு செய்யப்பட்ட PDF ஃபைல் ஓபன் செய்ய பாஸ்வேர்டு பதிவிட வேண்டும். அதற்கு, உங்கள் ஆதார் அட்டையில் உள்ளபடி உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் பெரிய எழுத்துகளில் (capital letters) பதிவிட வேண்டும். மற்றும் நீங்கள் பிறந்த ஆண்டு year of birth (YYYY) பதிவிட வேண்டும். இதைப் பயன்படுத்தி இ-ஆதார் கார்டு ஓபன் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to download aadhaar card online in simple steps

Best of Express