scorecardresearch

அடிதூள்.. ஏர்டெல் வழங்கும் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா: எப்படி பெறுவது?

Airtel Thanks செயலி மூலம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

airtel-5g-unlimited
airtel-5g-unlimited

இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. ஜியோ 500க்கும் மேற்பட்ட நகரங்களிலும், ஏர்டெல் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களது சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.

ஜியோ வெல்கம் ஆஃபரின் (welcome offer) கீழ் தகுதியான பயனர்களுக்கு 5ஜி டேட்டாவை இலவசமாக வழங்கி வருகிறது. அதாவது 4ஜி ரீசார்ஜ் திட்டத்திலேயே 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 5ஜிக்கு என கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. அந்தவகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. ஏர்டெல் தனது 5ஜி சேவையை ஏர்டெல் 5ஜி பிளஸ் என்ற பெயரில் வழங்கி வருகிறது.

இலவச 5ஜி டேட்டா எப்படி பெறுவது?

ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையைப் பெறுவதற்கு முதலில் 5ஜி இணைப்பு உள்ள ஸ்மார்ட்போன் தேவை. உங்கள் ஏர்டெல் 4ஜி சிம் கார்டை 5ஜி சிம்மாக மாற்ற வேண்டும். Airtel Thanks செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும். ஏர்டெல் நாடு முழுவதும் 265 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது, வழங்குகிறது.

ஏர்டெல்லின் இலவச 5ஜி ஆஃபர் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்கள் என இருவருக்கும் கிடைக்கிறது. இலவச 5ஜி சேவை பெற கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மை ஏர்டெல் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். உங்கள் ஏர்டெல் எண் பயன்படுத்தி ஓபன் செய்ய வேண்டும். அங்கு “அன்லிமிடெட் 5ஜி டேட்டா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இங்க இருக்கு ட்விஸ்ட்

ஏர்டெல் இலவச 5ஜி டேட்டாவை அனைவருக்கும் வழங்கவில்லை. குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்குகிறது. ஆக்டிவ் ப்ரீபெய்ட்/ போஸ்ட்பெய்ட் திட்டப் பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது மாதம் ரூ.239 அல்லது அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டும் வழங்குகிறது. இருப்பினும், ரூ.455 அல்லது ரூ.1799 திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருந்தால் இந்த ஆஃபரைப் பயன்படுத்த முடியாது.

மேலும், 5ஜி சேவையை மொபைல் ஹாட்ஸ்பாட் முறையில் லேப்டாப், கணினிக்கு ஷேர் செய்து பயன்படுத்த முடியாது. ஸ்மார்ட்போனில் மட்டும் பயன்படுத்த முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to get unlimited 5g data on airtel for free on android and ios devices

Best of Express