உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வளர்ந்து வரும் சமூக ஊடக உலகில் இமெஜ் (புகைப்படங்கள்) கதைகள் மற்றும் செய்திகளை உலகிற்கு சொல்கிறது.
படங்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. செய்தித் துறை முதல் பல்வேறு துறைகளில் படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இருப்பினும், இதில் போலி, ஏ.ஐ-யால் உருவாக்கப்பட்ட படங்கள் சில சமயங்களில் மக்களை ஏமாற்றுகிறது. மோசடிகளுக்கும் ஆளாக்குகிறது. இந்த வகையில் போலி, ஏ.ஐ படங்களை கண்டறிவது எப்படி? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Reverse image search
ஒரு படத்தின் நம்பகத்தன்மையை கண்டறிவதற்கான முதல் படி Reverse image search ஆகும். இந்த அம்சத்தில் டெக்ஸ்ட்க்குப் பதிலாக நீங்கள் சந்தேகப்படும் படங்களை பதிவிட வேண்டும். ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது கணினியில் கூகுள் லென்ஸ் மூலம் இதை செய்யலாம். அல்லது ‘யாண்டெக்ஸ் சர்ச் என்ஜின் தளத்திலும் இதை செய்யலாம்.
https://indianexpress.com/article/technology/artificial-intelligence/beyond-pixels-ai-generated-images-facts-about-fiction-artificial-intelligence-8962570/
அவ்வாறு செய்யும் போது பிற ஊடக தளங்கள் அல்லது செய்தி கட்டுரைகளில் படம் முன்பு பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறியலாம். மேலும் இந்த படங்கள் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதையும் நீங்கள் அறியலாம். இது பயனளிக்கவில்லை என்றால் அந்தப் படத்தைப் பற்றிய கீவேர்ட் பயன்படுத்தி கூகுளில் தேடலாம்.
AI இமேஜ் டிடெக்டர்கள்
AI ஐப் பயன்படுத்தி படம் உருவாக்கப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், ஹைவ் மாடரேஷன், ஆப்டிக் ஏ.ஐ (ஆர்) நாட் மற்றும் மேப்பிஸ் ஏ.ஐ ஆர்ட் டிடெக்டர் போன்ற AI இமேஜ் டிடெக்டர்களைப் பயன்படுத்தவும்.
மேலும் கூகுளின் பார்ட் ஏ.ஐ-யும் போலி படங்களைக் கண்டறிய உதவுகிறது. படத்தை பதிவிட்டு அதற்கு ஏற்றால் போல் prompt கொடுக்க வேண்டும். (எ.கா) படத்தை பதிவிட்டு ‘tell me more about the picture?’ or ‘Where was this taken?’ போன்ற கேள்விகளை எழுப்பினால் கூகுள் பார்ட் உங்களுக்கு சரியான பதில்களை தரக் கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“