வாட்ஸ்ஆப்-ல் ப்ளாக் செய்துவிட்டார்கள் என்பதனை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? இதற்கு பதில் என்ன என்று கேட்டால், ஆம் என்று தான் கூறவேண்டும். அடடே! அது எப்படி என என்று கேட்பது புரிகிறது. வாருங்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை காணலாம்.
பேஸ்புக்-ல் ஒருவர் தம்மை ப்ளாக் செய்திருந்தால், அதனை கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயமாக தான் இருக்கும். ஆனால், வாட்ஸ்அப் என்று எடுத்துக் கொண்டால், ப்ளாக் செய்திருப்பதை கண்டுபிடிப்பது என்பது சற்று கடினம் தான். எனினும், ப்ளாக் செய்திருந்தால், அதனை கண்டுபிடிக்க சில விஷயங்களும் இருக்கத் தான் செய்கிறது. அவை என்னவென பார்க்கலாமே!
லாஸ்ட் சீன் பார்க்கமுடியாது - ஆன்லைன்ல இருப்பதையும் பார்க்க முடியாது
வாட்ஸ்ஆப்-ல் ப்ளாக் செய்துவிட்டதாக நினைத்தால், அந்த நபரின் வாட்ஸ்ஆப்-ன் லாஸ்ட் சீன் பார்க்க முடியாது. அதேபோல அந்த நபர் ஆன்லைன்ல இருப்பதையும் காண முடியாது.
குறிப்பு: நீங்கள் லாஸ்ட் சீன் ஆப்ஷனை ஆஃப் செய்திருக்கலாம் அல்லது ப்ளாக் செய்தவர் அவரது லாஸ்ட் சீன் ஆப்ஷனை ஆஃப் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ப்ரொபைல் பிக்சரை பார்க்க முடியாது
ப்ளாக் செய்திருந்தால், அந்த நபரின் வாட்ஸஆப் ப்ரொபைல் பிச்ரை காண முடியாது.
குறிப்பு: வாட்ஸ்அப்- ப்ரொபைல் பிக்சரை நீக்கியிருக்கவும், அவரது பிரைவசி செட்டிங்கில் மாற்றமும் செய்திருக்கலாம்.
ஒன் செக் மார்க்: ப்ளாக் செய்திருக்கும் நபர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ், அவர்களுக்கு டெலிவரி ஆகாது. “ஒன் செக் மார்க்” இருப்பதையே காட்டும்.
குறிப்பு: ஒருவேளை ஆஃலைனில் இருக்கலாம், அல்லது நெட்வொர்க் பிரச்சனையாக இருக்கலாம்.
வாட்ஸ்அப்- ஆடியோ, வீடியோ கால்
ப்ளாக் செய்திருக்கும் சமயத்தில் வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ- வீடியோ கால்கள் மூலமாக தொடர்பு கொள்ள முடியாது.
குறிப்பு: ஒருவேளை ஆஃலைனில் இருக்கலாம், அல்லது நெட்வொர்க் பிரச்சனையாக இருக்கலாம்.
இதுபோன்ற டிப்ஸ் மூலமாக வாட்ஸ்அப்-ல் ப்ளாக் செய்யப்பட்டுள்ளோமா அல்லது ப்ளாக் செய்யப்படவில்லையா என்பதனை கண்டறிந்து கொள்ள முடியம். ஆனாலும், ப்ளாக் செய்யப்பட்டுள்ளதை உறுதிபட அறிந்து கொள்ள எந்தவித குறிப்பிட்ட வசதிகளும் இல்லை.