அவகாசம் நீட்டிப்பு: ஆதார்- வாக்காளர் அட்டை இப்பவே இணையுங்கள்.. ஈஸி வழிமுறை

Aadhaar- Voter linking: ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Aadhaar- Voter Id linking
Aadhaar card updates

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டித்து அறிவித்துள்ளது. மார்ச் 31, 2024 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்தாண்டு மத்திய அரசு இதற்கான பணிகளை தீவிரப்படுத்தியது. ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று இதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து தற்போது ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான கால அவகாத்தை நீட்டித்துள்ளது. ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை போன் மூலமாக எளிதாக இணைப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஈஸி வழிமுறை

  1. முதலில் உங்கள் மொபைல் போனில் Voter Helpline என்ற செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.
  2. செயலியை ஓபன் செய்து, Voter registration என்ற ஆப்ஷனை கொடுக்கவும். அதில், Electoral Authentication Form (Form B) என்ற படிவத்தை செலக்ட் செய்து Gets Started எனக் கொடுக்க வேண்டும்.
  3. இப்போது உங்கள் மொபைல் எண் கேட்கும். அதை கொடுத்தப் பின் உங்கள் போனுக்கு OTP அனுப்பபடும்.
  4. OTP-யை கொடுக்க வேண்டும். இப்போது திரையில் இரண்டு ஆப்ஷன்கள் 1. Yes, I have voter ID number 2. No, I don’t have voter ID number எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  5. அதில், ஆம். என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது எனக் குறிப்பிடும். 1-வது ஆப்ஷைனை செலக்ட் செய்யவும்.
  6. இப்போது, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவிடவும். அடுத்து உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து ‘Fetch details’ கொடுக்கவும்.
  7. திரையில் வரும் விவரங்களை சரி பார்த்து Proceed கொடுக்கவும்.
  8. அடுத்ததாக, உங்கள் ஆதார் எண், மொபைல் எண், இமெயில் ஐடி கொடுத்து OK என்டர் செய்யவும். இப்போது Form B படிவத்தில் நீங்கள் பூர்த்தி செய்த அனைத்து விவரங்களும் மீண்டும் காண்பிக்கும். அதை சரிபார்த்து இறுதியில் Confirm கொடுக்க வேண்டும்.
  9. அவ்வளவு தான் உங்கள் படிவம் சமர்பிக்கப்படும்.
  10. படிவம் குறித்த ஸ்டேட்டஸ் டிராக் செய்வதற்கு Reference number கொடுக்கப்படும். அதைப் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் ஆதார் மிக முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் போலி வாக்காளர்களையும் எளிதில் அடையாளம் காண ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அவசியமாகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to link aadhaar voter id online

Exit mobile version