தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது தொடர்பாக மின்சார வாரியமும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் நுகர்வோர்கள் தங்களின் மின் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைத்துவருகின்றனர்.
இதற்கிடையில் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாகவும் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துவருகிறார்கள். இந்த நிலையில், மின் எண் உடன் ஆதார் எண்-ஐ ஆன்லைன் வாயிலாக இணைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.
அந்தப் பக்கத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும்.
இதையடுத்து, மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒரு ஓடிபி குறுஞ்செய்தி வாயிலாக வரும்.
அந்த ஓடிபியை பதிவிட்ட உள்நுழைய வேண்டும். தொடர்ந்து, ஆதார் எண் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும்.
பின்னர், ஆதார் கார்டு புகைப்படத்தை வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுந்தகவல் கிடைக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆதார் கார்டை மின்சார எண்ணுடன் இணைக்கலாம். வீட்டு மின் இணைப்பு முதல், விசைத்தறி, தோட்டம் என மின்சார இணைப்பு வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் இவ்வாறு ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil