மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் சமீப நாட்களில் பயனர்களின் வசதி மற்றும் தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்த ஏராளமான வசதிகளை அறிமுகம் செய்தது. அந்த வகையில் லாக் சேட் மற்றும்
சீக்ரெட் கோட் அம்சம் பயனர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதாவது, வாட்ஸ்அப்-ல் தனி நபரின் சேட்-ஐ பாஸ்வேர்ட் அல்லது face unlock or fingerprint கொண்டு லாக் செய்யலாம். அந்த வரிசையில் லாக் செய்யப்பட்ட சேட்-ஐ சீக்ரெட் கோட் பயன்படுத்தி தேடி பார்க்கலாம். இந்த அம்சங்களை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்ப்போம்.
வாட்ஸ்அப் சேட் லாக் செய்வது எப்படி?
1. முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து எந்த சேட்-ஐ லாக் செய்ய வேண்டுமோ அந்த சேட்-ஐ long-press செய்யவும்.
2. அடுத்து வலப்புறம் வரும் 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து ‘Lock chat’ என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது ‘Continue’ பட்டன் கொடுத்து fingerprint or face unlock செய்து சேட்-ஐ லாக் செய்யலாம்.
இப்போது சேட் லாக் செய்யப்படும். வாட்ஸ்அப் ஸ்கிரீனை ஸ்பைப்- அப் செய்யும் போது ‘Locked chats’ என காண்பிக்கும் அதை கிளிக் செய்து fingerprint or face unlock கொடுத்து மெசேஜை பார்க்கலாம்.
அடுத்து இதோடு சீக்ரெட் கோட் ஆப்ஷனையும் செட் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் லாக் செய்யப்பட்ட சேட்-ஐ ஸ்பைப்- அப் செய்து பார்க்காமல் சர்ச் பாரில் நீங்கள் குறிப்பிட்ட சீக்ரெட் கோட் கொண்டு தேடி பார்க்கலாம்.
சீக்ரெட் கோட் பயன்படுத்துவது எப்படி?
- சீக்ரெட் கோட் வசதி பயன்படுத்த ‘Locked Chats’ பக்கம் செல்லவும்.
2. இப்போது சீக்ரெட் கோட் ஆப்ஷனை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் சீக்ரெட் கோட் கிரியேட் செய்ய கேட்கும். நீங்கள் எமேஜி அல்லது 4 எழுத்து லெட்டர்ஸ் என எது வேண்டுமாலும் சீக்ரெட் கோட்-ஆக பயன்படுத்தலாம்.
3. இதைசெய்து ‘ஓகே’ பட்டன் கொடுத்தால் சீக்ரெட் கோட் கிரியேட் ஆகி விடும்.
அடுத்து சேட் லாக் செட்டிங்ஸ் சென்று ‘Hide locked chats’ கொடுத்தால் ஸ்பைப்- அப் செய்து பார்க்கும் ஆப்ஷன் disappear ஆகி சர்ச் பாரில் சீக்ரெட் கோட் பயன்படுத்தி பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil