நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து, வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சமூகவலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து மகிழ்வர். அந்த வகையில் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் அனுப்பி வாழ்த்து தெரிவிப்பது இப்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது.
பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை வாழ்த்து, காமெடி ஸ்டிக்கரஸ் எனப் பல உள்ளன. இந்த வரிசையில் வரும் தீபாவளிக்கு உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் ஸ்டிக்கர் அனுப்பி வாழ்த்து கூறுங்கள். ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து அனுப்புவது குறித்து இங்கு பார்க்கலாம்.
Step 1: ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்கள் கூகுள் பிளே ஸ்டோர் சென்று, 'Diwali stickers' (தீபாவளி ஸ்டிக்கர்ஸ்) என குறிப்பிட்டு தேடவும். பின் அதில் வரும் ஆப்களில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். (எ.கா) 'Animated Diwali Stickers' என்ற ஆப் கூகுள் பே ஸ்டோரில் உள்ளது. இதில் நிறைய வகையான ஸ்டிக்கர்கள் இருப்பதால் இது பரிந்துக்கப்படுகிறது.
Step 2: டவுன்லோடு செய்த பின் அதை ஓபன் செய்து, உங்களுக்கு விருப்பமான பேக்-களை தேர்ந்தொடுக்கலாம்.
இதில், Animated மற்றும் சாதாரண வாழ்த்து ஸ்டிக்கர்களும் இருக்கும்.
Step 3: தீபாவளி ஸ்டிக்கர் பேக் செலக்ட் செய்த பிறகு, இதை வாட்ஸ்அப்பில் add செய்ய வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள “+” ஐகானை கிளிக் செய்து, 'Add stickers to WhatsApp' ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.
Step 4: டவுன்லோடு ஆன பின் மீண்டும் Add எனக் கேட்கும். அதையும் கொடுத்தால் ஸ்டிக்கர் பேக் வாட்ஸ் அப்பில் வந்துவிடும்.
Step 5: இப்போது வாட்ஸ் அப் சென்று, சாட் பகுதிக்கு செல்லுங்கள். அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமோஜி பட்டனுக்கு சென்றால் ஸ்டிக்கர் செக்ஷன் இருக்கும். அதில் நீங்கள் டவுன்லோடு செய்த ஸ்டிக்கர்ஸ் இருக்கும். இப்போது அதை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
இன்ஸ்டாகிராமில் தீபாவளி ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?
இன்ஸ்டாகிராம் இதற்கு புது அம்சத்தை வழங்குகிறது. அதாவது ஸ்டோரி மூலம் ஸ்டிக்கர் அனுப்பலாம். அதற்கு முதலில், ஸ்டோரி போடுவதற்கான content தயார் செய்ய வேண்டும். புகைப்படம் அல்லது செய்தி ஏதேனும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து, ஸ்டோரி பக்கத்தில் மேலே உள்ள navigation bar-இல் இருந்து sticker tool செலக்ட் செய்ய வேண்டும். sticker tool-யில் ஸ்டிக்கர் செலக்ட் செய்து அதை டிராக் செய்து ஸ்டோரியில் வைக்கலாம். பின் அதை நமக்கு பிடித்தமான முறையில் எடிட் செய்து பப்ளிஷ் செய்லாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil