Advertisment

கிளிக் செய்யாதீங்க; இதை கவனியுங்க: போலி இணையதளங்களை கண்டறிவது எப்படி?

போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி, மிரட்டல், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இத்தகு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றி இங்கு காண்போம்.

author-image
sangavi ramasamy
New Update
phishing attack.jpg

கடந்த மாதம், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று வெளியானது. பயனர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருட முயற்சிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் இது ஒரு "ஃபிஷிங் தாக்குதல்" என்றும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் "எந்தவொரு தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவலையும் பகிர வேண்டாம் மற்றும் வெளியிட வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தியது.

Advertisment

இன்றைய இன்டர்நெட் உலகில் சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி, மிரட்டல்களும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இத்தகு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றி இங்கு காண்போம். 

Study the address bar

வெப்சைட் பக்கத்தின் மேலே உள்ள address bar-யை படிக்கவும். இணையதளத்தின் இணைப்பு, 'https' என்று தொடங்குகிறதா, 's' என்பது 'பாதுகாப்பு' (secure) என்பதைக் குறிக்கிறது. இருப்பினும் இதை மட்டுமே முழுமையாக நம்ப வேண்டாம். URL இல் எழுத்துப்பிழைகள் உள்ளதா என சரிபார்க்கவும், எடுத்துக்காட்டாக, 'amazon' ஐ 'amaz0n' என்று இடம் பெற்றிருக்கலாம். மேலும் டொமைன் extension அதைப் பார்க்கவும். (.com, .net,  .org) போன்றவை சரியாக இடம்பெற்றிருக்கிறதா எனப் பார்க்கவும். 

எழுத்து, வார்த்தை பிழை

மொழி பயன்பாடு, இலக்கணப் பிழைகள், முழுமையற்ற வாக்கியங்கள், எழுத்துப் பிழை போன்றவை கண்டால், இணையதளத்தின் நம்பகத்தன்மையை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்.

Check the ‘About Us’ and ‘Contact Us’ section

‘About Us’ மற்றும் ‘Contact Us’ செக்ஷன்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். Contact Us பக்கத்தில் மொபைல் எண்கள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். About Us பக்கத்தில் அந்த நிறுவனம் பற்றிய தகவலையும் நீங்கள் சரிபார்க்கலாம். அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, அவர்களின் LinkedIn அல்லது பிற சமூக ஊடக சுயவிவரங்களைப் பார்க்கவும்.

Check the social media presence of the website

சில நேரங்களில், சமூக ஊடக தளங்கள் மூலம் நிறுவனத்துடன் இணைவது எளிதாகிறது. இணையதளத்தில் சமூக ஊடக சுயவிவரங்கள் உள்ளதா என சரிபார்க்கவும். ஆம் எனில், பின்தொடர்பவர்களைச் சரிபார்த்து, உள்ளடக்கத்தைப் பார்க்கவும். போஸ்ட் பகுதியையும் சரிபார்க்கவும். போஸ்ட் பற்றிய பயனர்களின் கருத்துளையும் பார்க்கவும். 

Check for too many pop ups and advertisements

வெப்சைட்டில் அதிகமான பாப் அப் அல்லது விளம்பரங்கள் உள்ளதா எனப் பார்க்கவும். அப்படி இருந்தால் அந்த பக்கத்தில் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம். 

Use an online website checker if possible

online website checker  இணையதளங்களை ஆய்வு செய்து அதன் ம்பகத்தன்மையைப் பற்றி பயனருக்குத் தெரிவிக்கும். இதை நீங்கள் செய்து பார்க்கலாம். அதேசமயம் மோசடி வலைத்தளங்களைப் புகாரளிப்பதும் மிகவும் முக்கியமானது. ஏதேனும் மோசடி இணையதளத்தை நீங்கள் கண்டறிந்தால், அவர்கள் ஆள்மாறாட்டம் செய்யும் அசல் நிறுவனத்திடமோ அல்லது சைபர் செல்லிடமோ அதைப் புகாரளிக்கலாம். இதன் மூலம் மக்கள் மோசடி இணையதளங்களுக்கு சிக்காமல் தடுக்க முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment