/indian-express-tamil/media/media_files/2PPxZP3XN6KeMbRt1rea.jpg)
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா பெயரில் ஒரு போலி வீடியோ வெளியானது. அதில், risk-free முதலீடு பற்றி அவர் பரிந்துரைப்பதாக கூறப்பட்டது. அவரின் ஆடியோ ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டிருந்தது.
இந்த டெலிகிராம் தளத்தில் சேர இந்த இணைப்பு கிளிக் செய்யவும் என வீடியோவின் கீழே லிங்க் கொடுக்கப் பட்டிருந்து. அது உங்களை டெலிகிராம் சேனலுக்கு அழைத்துச் செல்லும். பயனர் சேனலில் சேர்ந்தவுடன், @Money_Sonabot என்ற பயனர் பெயருடன், ‘சோனா அகர்வால்’ என்ற பெயருடைய மற்றொரு சேனலுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
அந்த சேனலில் இருந்த profile picture-ஐ தேடிப் பார்த்தால் அது ஒரு ஃபேஷன் ப்ளாகர் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர் சுக்னீட் வாத்வாவின் படம் உள்ளது.
இது போன்று பிரபலங்கள் முதலீடு குறித்து கூறுவதாக பல போலி வீடியோக்கள் டெலிகிராம் சேனலில் பகிரப்படுகிறது. ஏ.ஐ வாய்ஸ் டப்பிங் மூலம் போலியாக குரல் மாற்றப்படுகிறது.
டெலிகிராமில் இது போன்ற சேனல்கள் தனிப்பட்ட மற்றும் பொது வெளியில் உள்ளன. மேலும் செய்திகளில் உள்ள மொழி மற்றும் 'அவசரம்' தான் மக்களை மோசடியில் விழ தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
1. பாதுகாப்பு இல்லாத மற்றும் மற்ற டெலிகிராம் சேனலுக்கு அழைத்துச் செல்லும் லிங்க்-ஐ கிளிக் செய்யாதீர்கள்.
2. அதிக வருமானம் வரும் என்று கூறி விளம்பரம் செய்யும் திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள்.
3. ‘இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு’ போன்ற அவசரத் தொனியைப் பயன்படுத்தினால் முதலீடு செய்ய வேண்டாம்.
4. எந்த டெலிகிராம் சேனலிலும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தர வேண்டாம்.
5. இந்த மோசடிகளில் தவறுதலாக சிக்கினால் உடனடியாக சைபர் க்ரைம் போலீசுக்கு புகார் அளிக்கவும். உங்களுடைய வங்கிக்கும் தெரிவிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.