வந்துவிட்டது வெயில் காலம்.. எக்ஸ்சேஞ்சில் புதிய ஏசி பெறுவது எப்படி?

வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஏசிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

Flipkart
Flipkart

பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் சிறந்த விலையில் உங்கள் பழைய ஏசிக்கு புது ஏசி வாங்கலாம். எளிய முறையிலும் இதை செய்யலாம். அனைத்து வகையான ஏசிக்கும் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. பழைய ஏசியை எங்கு வாங்கி இருந்தாலும் சிறந்த முறையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. பழைய ஏசியை மாற்றுவதற்கு இது சரியான நேரமாக இருக்கும்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்துவது மிகவும் எளிது. பயனர் முதலில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்தி பழைய ஏசியை எக்ஸ்சேஞ்ச் செய்து புது ஏசியை ஆர்டர் செய்ய வேண்டும். பிளிப்கார்ட் ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து பழைய ஏசியை நீக்கி, புதிய ஏசியை டெலிவரி செய்வார்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்துவது எப்படி?

  1. நீங்கள் வாங்க விரும்பும் புதிய ஏசியை செலக்ட் செய்து ஆர்டர் பக்கத்தில் ,“Exchange your old AC in 30 seconds” கொடுக்கவும்.
  2. இப்போது உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும். உங்கள் பழைய ஏசியின் வகை (split or window), என்ன பிராண்ட், capacity உள்பட கேள்விகள் கேட்கப்படும்.
  3. இதற்கு பதிலளித்து Confirm Exchange பட்டனைக் கொடுக்கவும்.
  4. அடுத்து புதிய ஏசி வாங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு பேமண்ட் பக்கம் செல்ல வேண்டும். அதை பூர்த்தி செய்து ஆர்டர் கொடுக்கவும்.
  5. இப்போது பிளிப்கார்ட் ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து பழைய ஏசியை அகற்றி எடுத்துச் செல்வார்.
  6. ஊழியர் ஏசியை செக் செய்து எடுத்துச் செல்வார்.
  7. புது ஏசி உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய ஏசி ரூ.4,000 முதல் ரூ.5,700 வரை பெறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to trade in your old ac for a new one with flipkarts exchange program

Exit mobile version