கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்றவைகள் பிரபலமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி ஆகும். ஓர் இடத்தில் இருந்து கொண்டே தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் நொடியில் பணம் அனுப்பலாம். அந்த வகையில் இந்த செயலிலேயே Wallet என்ற அம்சம் இருக்கும். அதாவது அந்த செயலியில் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்து பயன்படுத்துவதாகும். இவ்வாறு செய்யும் போது சில சமயங்களில் நிறுவனங்கள் மூலமாக ஆஃபர் வழங்கப்படும். அதனால் பலரும் இப்படி Wallet-ல் பணத்தை சேமித்து பயன்படுத்துவர்.
இந்தநிலையில் என்.பி.சி.ஐ 2 தினங்களுக்கு முன் யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய விதியை அறிவித்தது. அதன்படி Wallet பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. அதேசமயம் வங்கி கணக்கு உடனான யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் போல் இலவசமாக பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தது. இந்தநிலையில் Paytm மற்றும் PhonePe வாலட்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு திரும்ப மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Paytm வாலட் டூ வங்கி கணக்கிற்கு பணம் மாற்றுவது எப்படி?
- முதலில் உங்கள் பேடிஎம் செயலியை ஓபன் செய்யவும்.
- அதில் Paytm Wallet கிளிக் செய்யவும்.
- அடுத்து 'Transfer to Bank' ஆப்ஷளை கொடுக்கவும்.
- எவ்வளவு தொகை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த தொகை குறிப்பிட்டு 'Transfer'பட்டனை செலக்ட் செய்யவும்.
- இப்போது எந்த வங்கி கணக்கிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அந்த வங்கி கணக்கு விவரம், அதாவது வங்கி கணக்கு எண், IFSC code, வங்கி கணக்கு வைத்திருப்பவரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.
- ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்கள் சேமித்து வைத்திருந்தால் அதை செலக்ட் செய்து 'Transfer'கொடுக்கவும்.
- விவரங்களை அனைத்தையும் சரிபார்த்து 'Proceed' கொடுக்கவும்.
- இறுதியாக 'Confirm' பட்டன் கொடுத்து அனுப்பவும்.
PhonePe டூ வங்கி கணக்கிற்கு பணம் மாற்றுவது எப்படி?
- உங்கள் போனில் PhonePe செயலியை ஓபன் செய்யவும்.
- செயலி கீழே கொடுக்கப்பட்டுள்ள 'My Money' ஆப்ஷனைக் கொடுக்கவும்.
- அடுத்து 'Wallet/Gifts Voucher' செக்ஷனை தேர்ந்தெடுத்து செலக்ட் செய்யவும்.
- அடுத்து PhonePe Wallet ஆப்ஷனை கொடுக்கவும்.
- இப்போது PhonePe Wallet செக்ஷனில் 'Withdrawal' என்ற டேப் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்யவும்.
- அங்கு wallet ஐகான் மற்றும் வங்கி ஐகான் இருக்கும். இதில் நீங்கள் வங்கி ஐகான் drag செய்யவும்.
- எவ்வளவு தொகை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த தொகை குறிப்பிட்டு 'Proceed'பட்டனை செலக்ட் செய்யவும்.
- ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்கள் சேமித்து வைத்திருந்தால் அதை செய்து பின்வரும் விவரங்களை கொடுக்கவும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் உடனடியாக செலுத்தப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.