கூகுள் சர்ச் அம்சம் பயன்படுத்தி நேரடியாக ஏ.ஐ படங்கள் உருவாக்க புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Search Generative Experience (SGE) டூல் பயன்படுத்தி ரெக்ஸ்ட் டைப் செய்தால் ஏ.ஐ படங்கள் உருவாக்க முடியும்.
இந்த அம்சத்தை கூகுள் லேப்ஸ் ப்ரொகிராமில் இணைந்து பயன்படுத்தலாம். நீங்கள் குறிப்பிடும் ரெக்ஸ்ட்-க்கு ஏற்ப ஏ.ஐ படங்கள் உருவாக்கப்படும்.
இந்த அம்சம் மைக்ரோசாப்டின் பிங் இமேஜ் கிரியேட்டரைப் போன்றது. இது OpenAI-ன் Dall-E 3 மாடலைப்
பயன்படுத்தி ரெக்ஸ்ட் டைப் செய்து படங்களை உருவாக்குகிறது. பிங் இமேஜ் கிரியேட்டர் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பயனர்களிடையே பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூகுள் கூறுகையில், SGE டூல்லில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் மற்றும் பொருத்தமற்ற படங்களை உருவாக்குவதைத் தடுக்க இதில் பல்வேறு கட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எ.கா. நிறுவனத்தின் ஏ.ஐ-க்கான பாலிசியில் தடைசெய்யப்பட்ட கருத்துகளைக் கொண்டு இது படம் உருவாக்காது. அதே போல் கொள்கையை மீறும் படங்களையோ அல்லது குறிப்பிடத்தக்க நபர்களை சித்தரிக்கும் படங்களையோ கருவி உருவாக்காது.
SGE ஆல் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு படமும் AI ஆல் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்க மெட்டாடேட்டா லேபிளிங் மற்றும் வாட்டர்மார்க்கிங் இருக்கும் என்றும் கூகுள் கூறுகிறது. மேலும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
கூகுள் ஏ.ஐ இமேஜ் ஜெனேரேட்டார் எப்படி பயன்படுத்துவது?
இந்த அம்சம் தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் கொடுக்கப்பட வில்லை. அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் கூகுள் லேப்ஸ் ப்ரொகிராமில் இணைந்து அனைவரும் பயன்படுத்தலாம்.
- ஆண்ட்ராய்டு போனில் கூகுள் ஆப் ஓபன் செய்யவும்.
2. இடப்புறத்தில் உள்ள லேப்ஸ் ஐகானை கிளிக் செய்யவும். ஒருவேளை ஐகான் இல்லை என்றால் காத்திருங்கள். இன்னும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
3. கூகுள் லேப்ஸ் ஆக்சஸ் கிடைக்க காத்திருக்க வேண்டும். ஆக்சஸ் மெயில் கிடைத்ததும் லாக்கின் செய்யவும்.
4. Search Generative Experience டூல் பயன்படுத்தி டைப் செய்து ஏ.ஐ படங்களை உருவாக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“