கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை பல்வேறு ஆண்ட்ராய்டு செயலியிலும் பயன்படுத்துவது எப்படி?

கூகிள் மொழிபெயர்ப்பு செயலி வெளியானது முதல் அதனை மேம்படுத்தும் வகையில் புதுப்புது சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன

கூகிள் மொழிபெயர்ப்பு செயலி வெளியானது முதல் அதனை மேம்படுத்தும் வகையில் புதுப்புது சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Android app, Google, Google Translate, Smartphones,

கூகிள் நிறுவனமானது 2006-ம் ஆண்டு கூகிள் மொழிப்பெயர்ப்பு செயலியை வெளியிட்டது. கூகிள் மொழிபெயர்ப்பு செயலி வெளியானது முதல் அதனை மேம்படுத்தும் வகையில் புதுப்புது சிறப்பம்சங்கள் செயலியில் சேர்ந்து வருகிறது அந்நிறுவனம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் செயல்படக்கூடிய இந்த கூகிள் மொழிபெயர்ப்பு செயலி, இணையத்தின் இணைப்பு இல்லாமலே மொழிபெயர்ப்பு செய்யக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு.

Advertisment

தற்போதைய நிலையில், சுமார் 100 வகையான மொழிகளுக்கு சப்போர்ட் செய்யக்கூடிய இந்த கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை, சுமார் 200 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அனைத்து வகையான ஆண்ட்ராய்டு செயலிகளிலும் இந்த கூகிள் மொழிபெயர்ப்பு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஆண்ட்ராய்டு செயலியில், கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்த முடியும். உதாராணமாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உபயோகிப்பது எப்படி ?

டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற சிறப்பம்சத்தை பயன்படுத்த வேண்டுமானால், பயனர்கள் முதலில் சமீபத்திய அப்டேட்ஸ் கொண்ட கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை டவுண்லோடு செய்ய வேண்டும். அதனை இன்ஸ்டால் செய்து, இடதுபுற மேல் பகுதியில் உள்ள “த்ரி லைன் பட்டன்” ( three line button)என்பதனை க்ளிக் செய்யவும். செட்டிங்ஸை க்ளிக் செய்த பின்னர் டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற ஆப்ஷனை காண முடியும். இதைத்தொடர்ந்து, toggle button மூலம் செயல்படுத்தி, அனைத்து வகையான ஆண்ட்ராய்டு செயலியிலும் கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

இந்த வசதியானது செயல்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றால், வாட்ஸ்அப் செயலிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப்-ல் மெசேஜ் ‘காபி’ செய்யும்போது, கூகிள் மொழிபெயர்ப்பு ஐகான் தெரிவதை காண முடியும்.

மொழிபெயர்ப்பு தேவை என்ற சமயத்தில் ஒவ்வொரு முறையில், வேறு செயலிக்கு செல்வதற்கு பதிலாக இந்த சேவையை பயன்படுத்துவதால், மொழிபெயர்ப்பு எளிதாகிறது.

Google Android

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: